தடையை தகர்த்தெறிந்த ‘மஹா’... செம்ம குஷியில் சிம்பு, ஹன்சிகா ரசிகர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2021, 10:51 AM IST
Highlights

தனக்காக சம்பள பாக்கிகாக படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் ஜமீல் வழக்கு தொடர்ந்தார். 

நடிகர் சிம்பு ஹன்சிகா நடித்த படம் மஹா, இந்த படத்தை படத்தை எக்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். இப்படத்தை உபைத் ரஹ்மான் ஜமீல் என்பவர் இயக்கினார்.  இந்நிலையில் தனக்காக சம்பள பாக்கிகாக படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் இயக்குனர் ஜமீல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்த போது, இயக்குனர்  சார்பாக ஆஜரான வக்கீல் நடிகர் சிம்பு நடித்த படத்தில் முடியும் தருவாயில் இருந்த  நிலையில் தயாரிப்பாளர் வேறு ஒருவரை வைத்து படத்தை தயாரித்து முடித்து விட்டார்.

தற்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனக்கு ரூ 10 லட்சம் நஷ்டஈடு தர தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.  படத்தை இயக்க 24 லட்சம் ரூபாய் ஊதியம் தருவதாக ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம், 8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே தந்துள்ளதால், மீதமுள்ள 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். அப்போது தயாரிப்பாளர் சார்பாக ஆஜரான வக்கீல் விஜயன் சுப்பிரமணியம் இந்த படத்தை முழு உரிமையும் தயாரிப்பாளர்கள் தான் உள்ளது. 

இந்த எனவே இந்த படத்தை திரையிட தடை விதிக்க கூடாது இயக்குனர் தர வேண்டிய சம்பள பாக்கி சமரசம் பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது என்று கூறினார். இதைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் படம் வெளியிட தடை விதிக்க முடியாது ரூ 10 லட்சம் நஷ்டஈடு கோரிய வழக்கில் தயாரிப்பாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடுகிறேன் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்று உத்தரவிட்டார். 
 

click me!