நேற்று விஜய் சேதுபதி... இன்று தயாரிப்பாளர் தாணு! முதல்வரின் பொது நிவாரணத்திற்கு அடுத்தடுத்து உதவும் பிரபலங்கள்

By manimegalai aFirst Published Jun 16, 2021, 1:08 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுடன் கைகோர்த்து,  பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் தாணு முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.10  லட்சம் வழங்கியுள்ளார்.
 

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசுடன் கைகோர்த்து,  பல பிரபலங்கள், தொழிலதிபர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் அடுத்தடுத்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் தாணு முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.10  லட்சம் வழங்கியுள்ளார்.

மேலும் செய்திகள்: கொரோனாவிற்கு அன்பு மகனை பறிகொடுத்த பிரபல நடிகை... கணவருக்கு தீவிர சிகிச்சை..!
 

தமிழகத்தை கொரோனா இல்லாதா மாநிலமாக  மாற்ற மத்திய - மாநில அரசும், சுகாதார துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் தற்போது கொரோனா தாக்கமும் சற்று குறைத்து கொண்டே வருவதால், தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை நிரந்தரமாக காப்பாற்ற, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது.

மேலும் முதல்வர் ஸ்டாலின், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், பெட், ஆச்சிஜன் செறிவூட்டிகள், மற்றும் தடுப்பூசி போன்றவற்றின் தேவைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி கொடுத்து உதவ வேண்டும் என்கிற அறிக்கை வெளியிட்ட பின், அடுத்தடுத்து பலர் தங்களால் முடிந்த உதவிகளை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவும், நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் காலாசாலைகளை வழங்கி வந்தனர்.

மேலும் செய்திகள்: சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி வீட்டில் நடந்த விசேஷம்! வைரலாகும் புகைப்படத்தால் குவியும் வாழ்த்து
 

அந்த வகையில் நேற்று பிரபல நடிகர் விஜய் சேதுபதி, சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து ரூ.25 லட்சத்திற்கான காசோலையை கொடுத்த நிலையில், அவரை தொடர்ந்து, தமிழ் திரையுலகின் பல வெற்றி படங்களை தயாரித்துள்ள தயாரிப்பாளர் தாணு, ரூ.10 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 'பாபநாசம் 2 ' படத்தின் கௌதமிக்கு பதில் நடிக்க உள்ளது இவரா? வெளியான தகவல்..!
 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது... "பெருந்தொற்று காலத்தில் ஆட்சியில் முதல் மாதத்தை நிறைவு செய்த நிலையில் உங்களின் வேகமான நடையும், விவேகமான முடிவும், ஓய்வில்லா களப்பணியும் தேசத்தை திரும்பிப் பார்க்க வைக்கிறது. தமிழகத்தின் துரித வளர்ச்சியில் உங்கள் தொலைநோக்குப் பார்வையும், பெருந்தொற்று பாதிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த விளிம்பு நிலை மக்களுக்கு நீங்கள் படைத்த பசியாற்றும் திட்டங்கள் உங்களையும், சந்ததிகளையும் தேகபலம், மனோபலத்துடன் நீண்ட ஆயுளை அளித்து தரும். உங்கள் தர்ம சிந்தனைக்கு, சினிமா தொழில் சிதைந்து நிற்கும் சூழலில் எனது சிறிய பங்களிப்பாக ரூபாய் 10 லட்சத்துக்கான வரைவோலையை இணைத்து உள்ளேன். உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்து நெஞ்சம் நிறைந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்".


 

click me!