
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதுகை மோனையோடு காமெடி செய்து வரும் பாலா 10 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பிடித்தவர். இது குறித்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: ராஷ்மிகா செம்ம ஹாட் போஸ்... முழு கால்களும் தெரியும் அளவிற்கு கவர்ச்சி அட்ராசிட்டி..!
யாருக்கும் எப்படி பட்ட திறமை இருக்கும் என்பதை யாரும் கணித்துவிட முடியாது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, பின்னர் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி தற்போது பல படங்களில் அடுத்தடுத்து நடிக்க கமிட் ஆகியுள்ளவர் பாலா.
மற்ற காமெடி பிரபலங்கள் டைமிங்கில் காமெடி செய்தாலும், பாலா பக்காவாக டைமிங்கிலும் எதுகை மோனையோடு கலாய்ப்பவர். இவர் கோமாளிகளை வெற்றி பெற முழு உழைப்பையும் போட்டாலும், எலிமினேஷன் என்று வந்தால், பாலா எந்த குக்குகளுக்கு செல்வாரோ அந்த குக் தான் அதிகப்படியாக வெளியேறுவார்கள். இதையும் அவரே கூறி, மற்றவர்களை சிரிக்க வைத்து விடுவார். இந்நிலையில் பாலா காமெடி திறமை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும், இதுவரை தெரியாத இவரது படிப்பு திறமை பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகள்: திருமண ஆசையை வெளிப்படுத்திய ரசிகர்... பிரியா பவானி ஷங்கரின் எதிர்பாராத பதில்..! இப்படி சொல்லிட்டாங்களே..!
பாலா காமெடியில் மட்டும் அல்ல படிப்பிலும் படு சுட்டியாம்... பத்தாம் வகுப்பில் 500-க்கு 490 மார்க் வாங்கி பள்ளியிலேயே இரண்டாவது மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கண்டிப்பாக இவர் எந்த அளவிற்கு மார்க் எடுத்திருப்பார் என எதிர்பாராத ரசிகர்கள் பலர், இவருடைய திறமையால் மேலும் உயர்வார் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.