நடிகர் விஷால் படப்பிடிப்பில், தத்ரூபமாக எடுக்கப்பட்ட... சண்டை காட்சி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஷால் படப்பிடிப்பில், தத்ரூபமாக எடுக்கப்பட்ட... சண்டை காட்சி வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நடிகர்களுமே, தங்களுடைய ஒவ்வொரு படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிகம் மெனக்கெடுவது உண்டு, சிலர் இத்தனை வெளியில் இருந்து மேலோட்டமாக பார்த்து விட்டு கருத்து சொன்னாலும் அவர்கள் படும் கஷ்டத்தை கூடவே இருந்து பார்த்தல் தான் அவர்களின் உழைப்பு தெரியும். இந்நிலையில் நடிகர் விஷால் தன்னுடைய படத்தின் சண்டை காட்சிக்காக சரமாரியாக அடி வாங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: குட்டை டவுசரில் நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வேற லெவல் யோகா..! வைரலாகும் வீடியோ..!
விஷால் தன்னுடைய 31வது படத்தை து.பா சரவணன் என்ற இயக்குனர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டது. கொரோனா வைரஸ் விதிமுறைகளுக்கு உட்பட்டு அணைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக விஷால் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தத்ரூபமான, ஆக்ஷன் காட்சி ஒன்றின் வீடியோவை விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்: மீண்டும் தனி விமானத்தில் பறந்த நயன் - விக்னேஷ் சிவன்! கைகோர்த்துக் கொண்டு காதல் பயணம் சென்றது எங்கு தெரியுமா?
அதில் விஷாலை சுற்றி நின்று கொண்டிருக்கும் சண்டை கலைஞர்கள் சரமாரியாக கண்ணாடி பாட்டில்களால் தாக்குகிறார்கள். குறிப்பாக ஒரு பாட்டில் அவரது முகத்தில் பட்டு உடைந்து சிதறுகிறது. இதன் பின்னர் விஷால் முகத்தை தண்ணீரால் கழுவுவது போன்ற காட்சிகளும் உள்ளது. இவரது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.