யாராவது தன்னை பற்றியே அசிங்கமா பேச சொல்லுவாங்களா? சதீஷின் விளக்கத்தை பார்த்து கடுப்பான தர்ஷா குப்தா!

By manimegalai a  |  First Published Nov 10, 2022, 10:48 PM IST

நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா கூறியதால் தான் சன்னி லியோன் ஆடையோடு அவரது ஆடையை ஒப்பிட்டு பேசியதாக வீடியோ வெளியிட்ட நிலையில் இதை பார்த்து கடுப்பாகி தர்ஷா குப்தா தற்போது போட்டு உள்ள ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில்... இந்த விழாவிற்கு இந்த படத்தில் நடித்திருந்த சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பட குழுவினர் அனைவருமே கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

திருமணம் குறித்து மனம் திறந்த அசோக் செல்வன்..! கண்டிப்பா காதல் திருமணம் தானாம்..!

இந்த நிகழ்ச்சியில் மேடையில் ஏறி பேசிய காமெடி நடிகர் சதீஷ் பாம்பேவில் இருந்து வந்திருக்கும் சன்னிலியோன் பட்டுப்புடவை கட்டி வந்திருப்பதாகவும், ஆனால் கோயம்புத்தூர் பெண்ணான தர்ஷா குப்தா கவர்ச்சி உடையில் வந்திருக்கிறார் என இருவரது ஆடையையும் ஒப்பிட்டு விமர்சிப்பது போல் பேசி இருந்தார். சதீஷின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பாடகி சின்மயி, இயக்குனர் நவீன் போன்ற பலர் ட்விட்டர் மூலம் சதீஷின் பேச்சுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.

சன்னி லியோன் - தர்ஷா குப்தா ஆடை விஷயத்தில் வாயை விட்டு சிக்கிய சதீஷ்..! அடித்து பிடித்து கொடுத்த விளக்கம்..!

இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில், நடிகர் சதீஷ் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நடிகை தர்ஷா குப்தா, தன்னுடைய தோழி தான் என்றும் அவர் என்னிடம் பேசும்போது சன்னி லியோன் கவர்ச்சி உடையில் வருவார் என்று நினைத்து நானும் இது போன்ற உடையில் வந்ததாகவும், ஆனால் அவர் பட்டு புடவையில் வந்துள்ளார். இது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக தெரிவித்தார். மேலும் அவரின் அனுமதியோடு தான் இந்த விஷயத்தை நான் மேடையில் பேசினேன் என கூறினார்.

கவனத்தை ஈர்த்த சமந்தா கையில் அணிந்துள்ள இரு மோதிரங்கள்! மயோசிடிஸ் சிகிச்சைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

இந்நிலையில் நடிகர் தர்ஷா குப்தா இந்த வீடியோவுக்கு எதிராக ட்வீட் ஒன்றை போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது "நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகிறார். இது மிகவும் விசித்திரமான இருக்கிறது. யாராவது என்னைப் பற்றி ஸ்டேஜில் நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்லுவாங்களா? எனக்கும் அன்னைக்கு அவ்வளவு ஹர்ட்டாதான் இருந்துச்சு பட் நான் அதை பெருசா காட்டிக்கல . ஆனால் இப்போ இப்படி சொல்றது சரியானது அல்ல... என்று ஆடை விஷயத்தை குறித்து பதிவிட்டுள்ளார். எனவே சதீஷ் பொய்யாக இப்படி ஒரு தகவலை வீடியோவில் கூறியுள்ளது, இந்த விஷயத்தை மேலும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது. 
 

click me!