ஆர் ஜே பாலாஜியின் அடுத்த பட டைட்டிலை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், என தொடர்ந்து ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து 67 வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தப் படத்தின் கதை மற்றும் பிரீ புரோடக்ஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
'டிரைவர் ஜமுனா' படக்குழுவின் திடீர் அறிவிப்பு..! சமந்தாவுடன் மோதாமல் பின்வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
இந்நிலையில் பிரபல நடிகரும் ஆர்.ஜே.வுமான பாலாஜி அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் டைட்டிலை இன்று நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து டி20 கிரிக்கெட் போட்டியின் போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் இந்த படத்தின் பெயர் 'சிங்கப்பூர் சலூன்' என்று ஃபர்ஸ்ட் லூக்குகள் வெளியாகியுள்ளது.
இதுவரை நடிக்கிறாத வித்தியாசமான கெட்டப்பில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இயக்குனர் கோகுல் இந்த படத்திற்கு கதை எழுதி இயக்க உள்ளார். மேலும் 2023 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்கிற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் கேட்ட ஏடாகூடமான கேள்வியால் ஜனனி - ஏடிகே இடையே வெடித்த சண்டை... வைரல் புரோமோ இதோ
தொடர்ந்து தனக்கு பொருத்தமான கதைகளையே தேர்வு செய்து, நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் ஆர்.ஜே.பாலாஜியின் இந்த படத்திலும் காமெடிக்கு குறைவில்லாம் இருக்கும் என்பது ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே தெரிகிறது.