ஐஸ்வர்யா படம் மிஸ் ஆனாலும்... லைகா புரோடக்ஷன்ஸ் அடுத்த படத்தில் பட்டத்து அரசனாக மாறிய அதர்வா!

Published : Nov 10, 2022, 07:40 PM ISTUpdated : Nov 10, 2022, 10:00 PM IST
ஐஸ்வர்யா படம் மிஸ் ஆனாலும்... லைகா புரோடக்ஷன்ஸ் அடுத்த படத்தில் பட்டத்து அரசனாக மாறிய அதர்வா!

சுருக்கம்

நடிகர் அதர்வா, லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிக்க உள்ள... புதிய படம் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது.   

பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் உருவாகும் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. 

’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும்  இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஒவ்வொரு படத்தின் கதையிலும் வித்தியாசம் காட்டி வருகிறார் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக ரீதியில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.

மனதை கொள்ளையடிக்கும் மெலடி பாடலாக வெளியாகியுள்ள தனுஷின் 'வா வாத்தி' லிரிகள் பாடல்! வீடியோ..

நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர். 

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில்... கிராமத்து கதை அம்சத்துடன்  எண்டர்டெயின்மெண்ட்டான படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை ஈர்த்த சமந்தா கையில் அணிந்துள்ள இரு மோதிரங்கள்! மயோசிடிஸ் சிகிச்சைக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்?

கொசுவலை போன்ற ஷர்ட் அணிந்து... பளபளக்கும் மேனியை பளீச் என காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்! போட்டோஸ்..!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும், லால் சலாம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், திடீர் என ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அதர்வா நீக்கப்பட்டு விட்டு, அவருக்கு பதில் விஷ்ணு விஷால் கமிட் ஆனார். அந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. லைகா நிறுவனத்தில் தயாராகும் அந்த படத்தை அதர்வா முரளி மிஸ் செய்தாலும், 'பட்டத்து அரசன்' பட வாய்ப்பை தட்டி தூக்கியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்