லியோ திரைப்பட ட்ரெய்லரில் நடிகர் விஜய் பேசிய சர்ச்சைக்குரிய வசனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு புகழ் பதில் அளித்தார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இ ஸ்பா நிறுவனத்தின் ஐந்தாவது கிளை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்பாவை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ப்ரொபஷனலாக மசாஜ் செய்வதற்கு தாய்லாந்து செல்ல வேண்டியதில்லை. தமிழ் நாட்டில் இ-ஸ்பாவில் மிகவும் சிறப்பாக மசாஜ் செய்கிறார்கள். பெண்கள் பாதுகாப்பாக மசாஜ் செய்ய இ-ஸ்பாவை தேர்வு செய்யலாம்.
கே.டி குஞ்சுமோகனின் ஜென்டில்மேன் 2, ஹாட்ஸ்டார்-க்காக விஜய் மில்டன் திரைப்படத்தில் நடிக்கிறேன், இன்னும் நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கிறேன். அஸ்வின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை எனக்கு அனுப்பி இருந்தார்கள். நான் எப்போது அந்த புகைப்படத்தை எடுத்தேன் என்று பார்த்தபோது, கிரிக்கெட் மேட்ச்சுக்கு செல்லும்போது என்னைப் போன்ற சாயலில் உள்ள ஒரு நபருடன் அஸ்வின் அந்த புகைப்படத்தை எடுத்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
1947 மாதிரி ஒரு படம் அமைந்தால் ஆக்சன் படங்களில் நடிப்பேன். கதையோடு ஒன்றிப்போகும் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தான் மட்டும் தான் இப்போது வைக்கிறார்கள். முந்தைய காலங்களில் டிராக் அந்த மாதிரி இருந்தது. கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு ஆகியோருக்கு அந்த டிராக்லையே சென்று கொண்டிருந்தது. தற்போது அந்த ட்ராக் இல்லை. கதையோடு ஒன்றிபோகும் நகைச்சுவைகளால் பெரிதாக வரவேற்கபடவில்லை, நிறைய நகைச்சுவை கதைகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
நடிகர் சந்தானமும் கூறி வருகிறார். அடுத்து நிறைய நகைச்சுவை கதைகளை கேட்டு நடிக்கலாம் என கூறி வருகிறார். நடிகர் சந்தனாத்துடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். டிடி ரிட்டர்ன்ஸ் படத்துக்கு பிறகு நிறைய நகைச்சுவை படங்களை நடிக்கலாம் என சந்தானம் கூறி இருக்கிறார். நாமே எழுதி நடிக்கலாம் என வேலைகளை செய்து கொண்டு வருகிறோம். மக்களை சிரிக்க வைக்க கொஞ்சம் நகைச்சுவைகளை செய்து கொண்டு தான் வருகிறோம்.
யாரும் யாரிடத்துக்கும் வர முடியாது. நாம் சென்று கொண்டிருந்தால் நமக்கு ஒரு இடம் கிடைக்கும் அந்த இடத்துக்கு செல்ல வேண்டும், இந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என யாருக்கும் ஆசை கிடையாது. கஷ்டம் வரும்போது துவண்டு போய் விடக்கூடாது. மேலே வர முடியாது என நினைத்து விட்டால் வர முடியாது. நெகட்டிவ் கமெண்ட்டாக பார்த்து துவண்டு போய்விட்டால் நம்மை விரும்புவர்களுக்காக ஓட முடியாது, ஓடிக்கொண்டே இருந்தால் நெகட்டிவாக போகிறவர்கள், ஒரு நாள் நமக்கு பாசிட்டிவாக மாறுவார்கள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
லியோ படத்தில் விஜய் கெட்ட வார்த்தை பேசிய தொடர்பான கேள்விக்கு, பதில் அளித்த நடிகர் புகழ், தெரியவில்லை அதிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள், ஏன் கெட்ட விஷயங்களை எடுக்கிறீர்கள், குழந்தை பிறந்த பிறகு பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன் லியோ ட்ரெய்லரை பார்க்கவில்லை என பதிலளித்தார்
இதையும் படியுங்கள்... ஒரு டிக்கெட் கூட வழங்காமல்... ஹவுஸ்புல் போர்டு வைத்ததால் பரபரப்பு - சென்னையில் விஜய் ரசிகர்கள் வாக்குவாதம்