லோகேஷ் பாணியில் யூனிவெர்ஸ் உருவாக்க ஆசை?.. ஆனா.. ட்விஸ்ட் வைத்து பேசிய GVM - துருவ நட்சத்திரம் லோடிங்!

By Ansgar RFirst Published Oct 13, 2023, 7:33 PM IST
Highlights

பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு, பல தடங்கல்களை தாண்டி விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். சியான் விக்ரம் இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

துவக்கத்தில் இந்த திரைப்படத்தில் நடிக்க பிரபல நடிகர் சூர்யா தான் தேர்வானதாக தகவல்கள் வெளியானது. ஆனால் பின்னர் பட குழுவுடன் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இந்த திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா அவர்கள் வெளியேறினார். பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகர் விக்ரம் ஒப்பந்தமானார். 

அதற்கு அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் முழுவீச்சில் படபிடிப்பு பணிகள் துவங்கியது, 2017 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் ஏறத்தாழ 90 சதவிகிதம் முடிக்கப்பட்ட நிலையில், அப்பொழுது இந்த திரைப்படத்தை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனத்துடன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டு இந்த திரைப்படம் அப்படியே நின்று போனது. 

ஜோவிகாவும் இல்ல.. விசித்திராவும் இல்ல.. பிக் பாஸ் 7 - அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர் யார் தெரியுமா?

இந்நிலையில் பல போராட்டங்களை கடந்து இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்த பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி, துருவ நட்சத்திரம் திரைப்படத்தை நடிகர் விக்ரம் அவர்கள் பார்த்து, கௌதம் வாசு தேவன் அவர்களை பாராட்டியதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் கட்சியில் அடுத்த பாகத்திற்கான தகவல் வெளியாகும் என்றும் கெளதம் வாசுதேவன் கூறியுள்ளார். 

ஆனால் மக்களுக்கு இந்த முதலாம் பாகம் பிடித்திருந்தால் மட்டுமே தனி யுனிவர்ஸை உருவாக்க ஆசை உள்ளதாக கௌதம் வாசுதேவனின் கூறியுள்ளது அவருடைய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்த பிரபல நடிகர் விநாயகன் இந்த திரைப்படத்திலும் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது.தும் குறிப்பிடப்பட்டது.

'துணிவு' பட வெற்றி.. சம்பளத்தை பல கோடியாக உயர்த்திய அஜித்! 'விடாமுயற்சி'-க்கு எவ்வளவு வாங்குகிறார் தெரியுமா?

click me!