நடிகை விசித்ரா தனது கவர்ச்சி வேடங்கள் குறித்து கூறிய கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகிறது.
90-களில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை விசித்ரா, 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இணைந்து பல காமெடி காட்சிகளிலும் நடித்து பிரபலமானார். ரசிகன், முத்து, சுயம்வரம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. 90ஸ் கிட்ஸ் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார் விசித்ரா.
விசித்ராவின் தந்தை நடிகர் வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா. விசித்ராவுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். விசித்ராவின் தந்தை 2011 ஆம் ஆண்டு அவர்களது பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த வேதனையிலிருந்து சிறிது சிறிதாக விசித்ரா மீண்டு வந்தார். தந்தை இறந்த கொஞ்ச நாட்களிலேயே தாயும் இறந்துவிட்டதால் அனாதை போல் உணர்வதாக விசித்ரா ஒருமுறை தெரிவித்திருந்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 4 மூலம் மீண்டும் கவனம் ஈர்த்தார் விசித்ரா. அந்த நிகழ்ச்சியில் அவர் 3-வது இடம் பிடித்து அசத்தினார். நடிகை விசித்ராவின் நடிப்பு மற்றும் சமையல் திறமை பற்றி நம் அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் நடிகை விசித்ராவின் கல்வித்தகுதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை விசித்ராவின் தந்தை நடிகர் வில்லியம்ஸ் மற்றும் தாயார் மேரி வசந்தா. விசித்ராவுக்கு இரண்டு சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் உள்ளனர். விசித்ராவின் தந்தை 2011 ஆம் ஆண்டு அவர்களது பண்ணை வீட்டில் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இந்த வேதனையிலிருந்து சிறிது சிறிதாக விசித்ரா மீண்டு வந்தார்.
தனது கணவர் ஹாஜியை கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் தான் விசித்ரா சந்தித்தார். ஹாஜி ஹோட்டலின் பொது மேலாளராக இருந்தார். இருவரும் காதலித்து 2001ல் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில், கடைசி மகன்கள் இரட்டையர்கள், கணவர் ஹாஜி ஓட்டல் துறையில் இருந்ததால், மும்பை, புனே, பெங்களூரு என பல இடங்களுக்கு டிரான்ஸ்ஃபர் பெற்று வந்தார்.
தற்போது பிக் பாஸ் சீசன் 7 இல் பங்கேற்று 18 போட்டியாளர்களில் மிகவும் பிரபலமானவராக விசித்ரா கருதப்படுகிறார். இந்த நிலையில் நடிகை விசித்ரா தனது கவர்ச்சி வேடங்கள் குறித்து கூறிய கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகிறது. முன்னதாக ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசிய அவர், “என்ன செய்கிறேன் என்று தெரியாமல் எனது முதல் படத்தில் கிளாமராக நடித்தேன், எனக்கு சொன்னதை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அந்த கதாபாத்திரம் பற்றி எதுவும் தெரியாது.
என்னை விட பதினைந்து வயது மூத்த கேரக்டரில் நடித்தேன். அப்போது எனக்கு போதிய முதிர்ச்சி இல்லை. எனக்கு வழக்கமான கவர்ச்சி வேடங்கள் கிடைத்தன. திரையுலகம் என்னை அப்படிப் பயன்படுத்தியது. ஏன் கவர்ச்சியான வேடங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்டார்கள். ஆனால் தமன்னா செய்ததை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.