கயல் தொடரில் நாயகியாக நடித்து வரும் சைத்ரா ரெட்டி, சொந்தமாக பால் பண்ணை ஒன்றை தொடங்கி உள்ளதாக அறிவித்து உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த சீரியல் மூலம் தான் நடிகை பிரியா பவானி சங்கர் அறிமுகமானார். அந்த சீரியலில் இருந்து பிரியா பவானி சங்கர் விலகிய பின்னர் அதில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி தமிழ் சீரியலில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தவர் தான் சைத்ரா ரெட்டி. பெங்களூருவை சேர்ந்தவரான இவர் தமிழில் நடித்த முதல் சீரியல் இதுவாகும்.
இதையடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லையாக நடித்து அசத்தினார். இதையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதுவும் தமிழில் முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடித்துவிட்டார் சைத்ரா ரெட்டி. எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார் சைத்ரா. இதையடுத்து இவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் கயல் சீரியல்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் சக்கைப்போடு போட்டு வருகிறது. டிஆர்பியில் பிக்பாஸுக்கு டஃப் கொடுக்கும் சீரியலாகவும் கயல் இருந்து வருகிறது. சீரியல் மூலம் பல லட்சம் சம்பாதித்தாலும், தற்போது சைடு பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதுகுறித்த வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மாட்டுப்பால் கறக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள சைத்ரா ரெட்டி, 50 மாடுகளை வைத்திருக்க வேண்டும் என ஆசைப்பட்ட நான், தற்போது மாட்டுப்பண்ணை ஆரம்பித்துள்ளேன் என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகை சைத்ரா ரெட்டி பால் கறக்கும் வீடியோ தற்போது செம்ம வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இனி ஜவ்வா இழுக்க முடியாது... பிரபல சீரியலுக்கு எண்ட் கார்டு போட்ட சன் டிவி - அவர் இல்லாதது தான் காரணமா?