பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இதில் எப்படி பிக் பாஸ் ஹவுஸ் மெட்ஸை வெச்சு செய்வது என, பூர்ணிமாவுடன் விவாதித்து வருகிறார் மாயா.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள், கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்பதற்காக பல பிரச்சனைகளை உருவாக்கி கொண்டு, ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டு வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம், கடந்த ஆறு சீசனில் நடந்திடாத சம்பவம், பிக் பாஸ் சீசன் 7ல் அரங்கேறியது.
அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ள ஆறு போட்டியாளர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்டது 7 போட்டியாளர்கள் என்றும், பவா செல்லதுரை வெளியேறிவிட்டதால் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளனர். எனவே எங்களால் வேலைகள் செய்ய முடியாது, என ஸ்ட்ரைக் செய்தனர். இதனால் பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் மதியம் முழுவதும் சாப்பிடாமல் பசி பட்டினியில் வாடியதை பார்க்க முடிந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிக் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் அனுமதிக்காமல் கேஸ் ஆன் பண்ண முடியாது என்பதால், ஸ்மால் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்கள் பழம் உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு தங்களின் பசியை போக்கிக் கொண்டனர். அதேபோல் பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்தவர்களும், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிட்டனர். ஆனால் ஸ்மால் பாக்ஸ் வீட்டை சேர்ந்தவர்கள் தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் சிக்கல் ஏற்பட்டது. பிக் பாஸ்வும் இவர்களுடைய பிரச்சனைக்கு செவி சாய்க்காத நிலையில், அதிரடியாக களத்தில் இறங்கிய பிக் பாஸ் வீட்டில் கேப்டன் சரவணன் விக்ரம், இனி நானே வீட்டில் உள்ள வேலைகளை செய்வதாக ஏற்றுக் கொண்டார். பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வரவே மீண்டும் சமையல் செய்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தனர்.
இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தாலும் அடுத்ததாக என்ன பிரச்சனையை வாங்கலாம் என காத்திருக்கிறார் மாயா. அதன்படி தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், மாயா மற்றும் பூர்ணிமா இருவரும் வழக்கம் போல் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பூர்ணிமா இதுதான் என்னுடைய கடைசி வாரம் என தோன்றுகிறது என கூற, அதற்கு மாயா நீ எல்லாம் இல்லனா நானும் வெளியில் வந்துருவேன்... இவங்க கூட எல்லாம் மனுஷன் வாழ முடியாது என ஓவராக பேசுகிறார். அதை போல் இந்த முறை ஐஷுவை கேப்டனாக இறக்கினால், நாம தெறிக்க விடலாம் என கூறுகிறார். ஜோவிகா மற்றும் யுகேந்திரனை டார்கெட் செய்து, "இவர்களை நாம வச்சு செய்யணும்... நம்மகிட்ட வச்சிக்கவே கூடாது அப்படிங்கிற அளவுக்கு வச்சு செய்யணும் என பழி வாங்கும் குணத்துடன் பேசும், புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதே நேரம் இந்த வாரம் எலிமினேஷ இல்லை என்பது தெரியாமல் பூர்ணிமா இப்படி உளறி வருவதாக நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
of
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/DACHrGBtZn