ஒரு டிக்கெட் கூட வழங்காமல்... ஹவுஸ்புல் போர்டு வைத்ததால் பரபரப்பு - சென்னையில் விஜய் ரசிகர்கள் வாக்குவாதம்
சென்னையில் உள்ள காசி திரையரங்கில் லியோ படத்துக்கான டிக்கெட் விற்பனை கவுண்டரில் தொடங்கிய உடனே ஹவுஸ்புல் போர்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
Leo
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் 5 தினங்களே உள்ள நிலையில், நேற்று முதல் லியோ படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முன்பதிவு தொடங்கப்பட்டாலும், சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
kasi theatre X post
இந்த நிலையில், நேற்று மாலை சென்னையில் உள்ள காசி திரையரங்கம் சார்பில் அதன் எக்ஸ் தளத்தில் இன்று பிற்பகல் 12 மணி முதல் தியேட்டரில் உள்ள டிக்கெட் கவுண்டரில் லியோ படத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்து இன்று ரசிகர்கள் லியோ படத்தின் டிக்கெட்டுகளை வாங்க தியேட்டருக்கு ஆவலோடு சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
kasi theatre
ஆனால் அங்கு டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்த ரசிகர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்யும் முன்னரே அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்களுக்கு ஹவுஸ்புல் ஆகிவிட்டதாக போர்டு வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஒரு டிக்கெட் கூட வழங்கப்படாமல் ஹவுஸ்புல் போர்டு வைக்கப்பட்டதால் கடுப்பான ரசிகர்கள் தியேட்டர் நிர்வாகத்திடம் வாக்குவாதம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
fans in kasi theatre
இதையடுத்து தியேட்டர் நிர்வாகம் தரப்பில் இருந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் ரசிகர்களை சமாதானப்படுத்தி, ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் காசி திரையரங்கம் முன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படியுங்கள்... ஓட்டல் அறையில் வைத்து ஓங்கி விழுந்த அடி... அஜித்தை அவமானப்படுத்தினாரா பாலா? பிளாஷ்பேக் சம்பவங்கள்