இடியாப்ப சிக்கலாக நீளும் இந்தியன் 2 விவகாரம்..! பேச்சுவார்த்தை தோல்வி..! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

By manimegalai aFirst Published Apr 28, 2021, 1:22 PM IST
Highlights

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது வழக்கத்தில், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 
 

நடிகர் கமல் நடிக்கும் இந்தியன் -  2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல்  பிற படங்களை இயக்க இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது வழக்கத்தில், இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு தரப்பு இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. 

மேலும் செய்திகள்: ஆக்ஸிஜன் தட்டுப்பாடு... நடிகர் அக்ஷய் குமார் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!
 

இந்தியன் -  2  பட விவகாரம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு ஏப்ரல் 22 தேதி முன்பு விசாரணை செய்தது. அப்போது, இயக்குனர் சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  2022ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்,  வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார் எனவும் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாகவும், அவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திய சங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் செய்திகள்: சத்தம் இல்லாமல் வளரும் 'குக் வித் கோமாளி' சிவாங்கி..! புதிய சாதனைக்கு நெகிழ்ச்சியுடன் கூறிய நன்றி!
 

லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குனர் சங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீத தொகையை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தை கருத்தில் கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமூக தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் செய்திகள்: மகாராணியாக உயர்ந்து நிற்கும் சமந்தா... இணையத்தை கலக்கும் பிறந்தநாள் காமென் டிபி..!
 

இந்நிலையில் இன்று, விசாரணை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது...  'இந்தியன் 2 ' பட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதி பதிகள் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்து. அதே நேரத்தில் ஷங்கர் தரப்பு நியாத்தை கேட்காமல் தீர்ப்பு வழங்க முடியாது என தெரிவித்து,  இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

click me!