
கொரோனா தொற்றால் பிரபல தெலுங்கு நடிகர், அல்லு அர்ஜுன் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே, சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கோரமுகத்தை காட்டி, மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. மேலும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும், அல்லு அர்ஜுன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில்... " கொரோனா பரிசோதனை செய்தபோது எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன்.
அதே போல் என்னிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டு வீட்டிலேயே அனைவரும் பத்திரமாக இருங்கள். அதே போல் என்னுடைய நலம் விரும்பிகள், ரசிகர்கள் யாரும் கவலை பட வேண்டாம் நான் நலமுடன் உள்ளேன் என தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான், பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பதாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து மற்றொரு தெலுங்கு பிரபலமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது, நாளுக்கு நாள் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதை காட்டுகிறது.
எனவே, மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி... தடுப்பூசி செலுத்தி கொண்டு, வெளியில் சென்றால், சுகாதாரத்துடன், மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்தால் கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். என மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறை சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.