ஓடிடியில் ரிலீசாகும் தனுஷின் 'ஜகமே தந்திரம்'.. ரிலீஸ் தேதி இதோ..!

By manimegalai aFirst Published Apr 27, 2021, 7:17 PM IST
Highlights

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன்  உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

'கர்ணன்' படத்திற்கு முன்னரே, 'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால்,   இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதனால் தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர் தனுஷுக்கு இடையே மன கஷ்டங்களும் ஏற்பட்டது. இதன் காரணத்தினால் என்னவோ படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியான போது அதில் நடிகரின் தனுஷ் பெயர் இடம்பெறவில்லை. இது தனுஷ் ரசிகர்களை உச்ச கட்ட கோவத்தில் ஆழ்த்தியது.

தனுஷ் இல்லை என்றால் 'ஜகமே தந்திரம்' படமே இல்லை... அப்படியே படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் படத்தை புறக்கணிப்போம் என கோவத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

'ஜகமே தந்திரம்' ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாக நிலையில், சற்று முன்னர் 'ஜகமே தந்திரம்' படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ரிலீஸ்  தேதி குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி ஜூன் 18 ஆம் தேதி, 'ஜகமே தந்திரம்' திரைப்படம் நெட்பிளிக்சில் வெளியாகும் என தெரிவித்துள்ளனர். 

கொரோனாவின் இரண்டாவது அலை, இந்தியாவை மீண்டும் சுழட்டி அடித்து வருவதால், திரையரங்கில் வெளியாக இருந்த படங்கள் கூட மீண்டும் ஓடிடிக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 'ஜகமே தந்திரம்' படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

from 𝕁𝕌ℕ𝔼 𝟙𝟠 only on ! pic.twitter.com/g4SKM9cIPk

— Y Not Studios (@StudiosYNot)

 

click me!