ரைசா முகம் வீங்க காரணம் என்ன?... முதன் முறையாக மருத்துவர் பைரவி வெளியிட்ட உண்மை... அதிர்ச்சியான மறுபக்கம்!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 27, 2021, 5:38 PM IST
Highlights

சென்னை ஆழ்வார்பேட்டையில்  நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். 

தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வலம் வரும் ரைசா வில்சன் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த புகைப்படத்தில் ரைசா முகம் முகமெல்லாம் வீங்கி காணப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் முகப்பொலிவு பெற 1,27,500 ரூபாயை செலுத்தி சிகிச்சை எடுத்த பின்பு ரத்தக்கசிவு, வீக்கம் ஏற்பட்டதாக ரைசா புகார் தெரிவித்தார்.

மேலும் தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட தனக்கு 15 நாட்களுக்குள் ரூ.1 கோடி வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ரைசா அந்த மருத்து சிகிச்சை மையத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.தன்னுடைய வாடிக்கையாளர்கள் மத்தியில் அவதூறு பரப்பும் வங்கியில் ரைசா நாடகமாடி வருவதாகும், இதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது 1 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாகவும் மருத்துவர் பைரவி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில்  நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகை ரைசா வில்சன் எங்கள் மருத்துவமனையில் முதல் முறையாக சிகிச்சை பெற்றதாகவும் அதனால் மட்டுமே இப்படி பாதிப்பு எற்பட்டு இருப்பதாக பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கூறி இருந்தார்.

 ஆனால் நடிகை ரைசா வில்சன் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார்,மேலும் அவர் பெற்று வரும் சிகிச்சையில் திடீரென இப்படி ஏற்படலாம் என்றும் அந்த பாதிப்பு அதிகபட்சமாக 8 நாட்களில் சரி ஆகிவிடும் என்று தெரிந்தும் இப்படி மருத்துவமனை மீது உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை தெரிவித்து உள்ளார்.

மேலும் அவரை கட்டாயபடுத்தி எந்த ஒரு சிகிச்சையும் நடைபெறவில்லை,முழுமையாக சிகிச்சை குறித்து விளக்கமளித்து அவரிடம் கையொப்பம் பெற்ற பின்னரே சிகிச்சை நடைபெற்றது.எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்,சிகிச்சையில் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை,இதுகுறித்து எந்த ஒரு விசாரணைக்கும் தயாராக உள்ளோம்.
 

click me!