
53 வயதாகும் பிரபல இயக்குனர் தாமிரா, இன்று காலை கொரோனாவிற்கு பலியான நிலையில்... இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், கடைசியாக முகநூலில் போட்ட பதிவு, அனைவரையும் நெகிழ்சியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகள்: நடு கடலில் மனைவியை ஐஸ்வர்யாவை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் தனுஷ்.! வைரலாகும் போட்டோஸ்.!
தமிழில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ரெட்டி சுழி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தாமிரா. இதை தொடர்ந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு, சமுத்திர கனி - ரம்யா பாண்டியன் நடித்த 'ஆண் தேவதை' படத்தை இயக்கி இருந்தார். இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பத்தில், திடீர் என மனைவி ஆடம்பரத்தை விருப்புவதால் எப்படி சீர் குலைந்து போகிறது என்பது இந்த படம் விளக்கி கூறி இருந்தது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
இதை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகி வந்த இவர், இரண்டு படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும்... அனைவருடனும் மிகவும் அன்பாக பழகுவதாலும், எதார்த்தமான மனிதர் என்பதாலும் தமிழ் திரையுலகினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் விரும்பத்தக்க மனிதர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அசோக் நகரில் உள்ள, மாயா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் 2 வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த தாமிராவிற்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட, உயிர் காக்கும் கருவிகளுடன் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை தாமிரா உயிரிழந்தார்.
மேலும் செய்திகள்: பூஜா ஹெக்டேவை தொடர்ந்து... மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா..?
இவருடனான நினைவுகள் குறித்து, பகிர்ந்து... பிரபலங்கள் மற்றும் பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இவர், கடைசியாக முகநூல் பக்கத்தில் போட்ட ஒரு பதிவு அனைவரையும் நெகிழ வைக்கும் விதத்தில் உள்ளது அதில்... "இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்". என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.