போடுடா வெடிய... 'வாத்தி கம்மிங்' பாடலின் வேற லெவல் சாதனை..! தெறிக்க விடும் ரசிகர்கள்..!

Published : Apr 27, 2021, 04:35 PM IST
போடுடா வெடிய... 'வாத்தி கம்மிங்' பாடலின் வேற லெவல் சாதனை..! தெறிக்க விடும் ரசிகர்கள்..!

சுருக்கம்

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியானதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாக உள்ளது.  இந்த பாடல் தற்போது 150  மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.  

பட்டையை கிளப்பும் இசையில், புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக இருந்த, வாத்தி கம்மிங் பாடல் வெளியானதில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் செம்ம ட்ரெண்டாக உள்ளது.  இந்த பாடல் தற்போது 150  மில்லியன் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

மேலும் செய்திகள்: மிஸ் ஆன விக்னேஷ் சிவன்... தலைவர் படத்திற்காக காதலனை கழட்டி விட்டு மாஸாக ஐதராபாத்தில் தரையிரங்கிய நயன்தாரா...!
 

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்த, 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சனையின் கோர தாண்டவத்தால் படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியது. பின்னர் மெல்ல மெல்ல தளர்வுகள் அறிவிக்க பட்ட பின்னர், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவின் போது 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வெளியானது. 

ஓடிடி தளத்தில் வெளியாகும் என வதந்திகள் கிளம்பிய போது.   பிரமாண்ட செலவில் உருவாகியுள்ளதால் இந்தப்படம் கண்டிப்பாக, திரையரங்கில் தான் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் ஸேவியர் பிரிட்டோ தெரிவித்துள்ளார். படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர் பிரபல ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: நடு கடலில் மனைவி ஐஸ்வர்யாவை வளைத்து வளைத்து புகைப்படம் எடுக்கும் தனுஷ்.! வைரலாகும் போட்டோஸ்.!
 

இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்திருந்தார். மேலும் முரட்டு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி தீனா, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, ரம்யா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

'மாஸ்டர்' படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரைடு என அனைத்து பாடல்களும்,  ரசிகர்களை கவர்ந்து சாதனை படைத்து விட்டது. குறிப்பாக வாத்தி கம்மிங் பாடலுக்கு பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரவருக்கு பிடித்த வர்ஷனில் டான்ஸ் ஆடி வெளியிட்டு லைக்குகளை அள்ளினார்.

மேலும் செய்திகள்:பிரபல நடிகர் பற்றி ஒரே வார்த்தையில் கூறிய ராஷ்மிகா மந்தனா..! ரசிகர்களின் கேள்விக்கு ஸ்வீட் பதில்!
 

இது ஒரு புறம் இருக்க, தற்போது வாத்தி கம்மிங் பாடல், 150  மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை, 'வாத்தி கம்மிங்' பாடலின் மியூசிக் உரிமை பெற்ற சோனி நிறுவனம் தன்னுடைய த்விட்டேர் பக்கத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 'மாஸ்டர்' படத்தை தொடர்ந்து விஜய், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'தளபதி 65 ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 20 நாட்களுக்கு மேலாக ஜார்ஜியாவில் நடந்து வந்த நிலையில், படக்குழுவினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Best Cinema Fathers : தமிழ் சினிமாவின் டாப் 10 அப்பாக்கள் யார்? யார்? | Father's Day Special
Siragadikka Aasai : விஸ்வரூபம் எடுக்கும் சிந்தாமணி... சவால்விட்ட முத்து - அரங்கேறும் அதிரடி ட்விஸ்ட்