ஆக்ஸிஜன் தட்டுப்பாடு... நடிகர் அக்ஷய் குமார் செய்த மிகப்பெரிய உதவி..! குவியும் பாராட்டு..!

By manimegalai aFirst Published Apr 28, 2021, 12:47 PM IST
Highlights

கொரோனா காலத்தில், தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் அக்ஷய் குமார்... ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 120 ஆக்ஸிஜன் செரிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் பலர் மனதார இவரை பாராட்டி வருகிறார்கள்.
 

கொரோனா காலத்தில், தன்னால் முடிந்த உதவிகளை செய்து வரும் அக்ஷய் குமார்... ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை போக்கும் விதமாக 120 ஆக்ஸிஜன் செரிவூட்டும் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். இவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் பலர் மனதார இவரை பாராட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா..! அவரே வெளியிட்ட அதிர்ச்சி பதிவு..!
 

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, பின் நலம் அடைந்தார். இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் தன்னுடைய கொடூர முகத்தை இந்தியாவில் காட்டத் துவங்கிய கொரோனா தாக்கத்தின் போது, பாதிக்க பட்ட மக்களுக்கு பல்வேறு வகையில் உதவிக்கரம் நீட்டினார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

அதே போல் கொரோனா இரண்டாவது அலை தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ள நேரத்தில், உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். கடந்த வாரம் கொரோனா நிவாரண பணிக்காக, பிரபல கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் நடத்தி வரும் என்.ஜி.ஓ விற்கு, நடிகர் அக்ஷய் குமார் ரூ.1 கோடி நிதி வழங்கி இருந்தார். உணவு, மருத்துவ உதவி, ஆக்ஸிஜன், போன்றவை இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு வழங்குவதற்காக  ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய் குமாருக்கு  கெளதம் கம்பீர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  மனதார நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: மகாராணியாக உயர்ந்து நிற்கும் சமந்தா... இணையத்தை கலக்கும் பிறந்தநாள் காமென் டிபி..!
 

இதை தொடர்ந்து, கொரோனா சிகிச்சையின் போது... போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு உதவும் விதமாக, தன்னுடைய மனைவி ட்விங்கிள் கண்ணாவுடன் இணைந்து, 120 ஆக்ஸிஜன் செறிவூட்டும் இயந்திரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். பணமாக கொடுப்பதை விட, மக்களின் உயிரை காக்கும் இது போன்ற கருவியை இவர் நன்கொடையாக வழங்கியுள்ளதற்கு, இவர்க்கு ரசிகர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பாராட்டு குவிந்து வருகிறது.


 

click me!