'திரிஷ்யம் 2 '-வை பிரிச்சு மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்..! தமிழ் பட டைரக்டர்ஸ் பார்த்து திருந்துங்கப்பா என மெசேஜ்!

Published : Feb 25, 2021, 11:39 AM ISTUpdated : Feb 25, 2021, 11:43 AM IST
'திரிஷ்யம் 2 '-வை பிரிச்சு மேய்ந்த ப்ளூ சட்டை மாறன்..! தமிழ் பட டைரக்டர்ஸ் பார்த்து திருந்துங்கப்பா என மெசேஜ்!

சுருக்கம்

திரைப்படங்களில் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கி பிரபலமான ப்ளூ சட்டை மாறன், தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும், 'திரிஷ்யம் 2 ' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் செய்து, சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர் படத்தை கிண்டல் செய்துள்ளார்.  

திரைப்படங்களில் குற்றம் கண்டு பிடித்தே பேர் வாங்கி பிரபலமான ப்ளூ சட்டை மாறன், தற்போது மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும், 'திரிஷ்யம் 2 ' படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் செய்து, சமீபத்தில் வெளியான முன்னணி நடிகர் படத்தை கிண்டல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு... 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
 

கடந்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுகளையும், வரவேற்பையும் பெற்று வருகிறது 'திரிஷ்யம் 2'. மலையாள படமாக இருந்தாலும், ப்ளூ சட்டை மாறன் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார். பொதுவாக இவர் விமர்சனம் செய்யும் படங்களை அவர் நன்றாக இருக்கிறது என்று கூறினால், அது தான் ஆச்சர்யம். இவரே தமிழ் பட இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்து கற்று கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டு கூறியுள்ளது " சில வருடங்களாகவே, தென்னிந்திய மொழிகளில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதல் பாகத்திற்கும், இரண்டாவது பாகத்திற்கும் சுத்தமாக சம்மந்தமே இருப்பதில்லை. முதல் பாகம் ஹிட் என்பதால்... இரண்டாம் பாகம் வேறு லெவலுக்கு இருக்கும் என எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேலும் செய்திகள்: உடலின் பல இடங்களில் அஜித் டாட்டூ தான்..! 'தல'யின் தீவிர ரசிகர் தற்கொலையால் பரபரப்பு!
 

ஆனால் 'திரிஷ்யம் 2' படத்தை பொறுத்தவரை, அப்படி இல்லாமல்... முதல் பாகத்தில்,  மோகன்லாலின் மகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கொலையை செய்து விட அந்த கொலையை மறைத்து தண்டனையிலிருந்து தப்புவது தான் முதல் பாகத்தில் கதையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக, திரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் இந்த கொலை குறித்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைக்க மீண்டும் மோகன்லால் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு சிக்கல் வருகிறது, இதில் இருந்து எப்படி மோகன் லால் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதையாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை சங்கீதாவின் மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிய குட்டி தேவதை..!
 

கேமரா, காட்சிகள், பொறுமையாக நகர்ந்தாலும் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்து அடுத்து என்ன நடக்கும்? என்று பரபரப்பாக  பார்க்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளது என்றும், ஆனால் சமீபத்தில் வெளியான 'சக்ரா' படத்தில் பல காட்சிகள் பரபரப்பாக இருந்தாலும், நம்மை பரபரப்பாக மாற்றவில்லை. எனவே, தமிழ் பட இயக்குனர்கள் இது போன்ற விஷயங்களை 'திரிஷ்யம் 2' படத்தை பார்த்து கற்று கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: விதவிதமான திருமண உடையில்... வியக்க வைத்த காஜல்...! பிரபல மேகஸினுக்கு வெறித்தன போட்டோ ஷூட்!
 

அதே நேரத்தில்.... வழக்கம் போல் இந்த படத்திலும் சில குறைகளை கண்டு பிடித்துள்ளார். ஆனால் அவை எதுவும் இந்த படத்தை விமர்சிக்கும் வகையில் இல்லாமல், மேலோட்டமாக கூறியுள்ளது ஆச்சர்யம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Anikha Surendran : சேலையில் காந்தப் பார்வையால் மயக்கும் குட்டி நயன் 'அனிகா' சுரேந்திரன்.. குவியும் லைக்ஸ்
Rakul Preet Singh : அழகிய தீயே.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோஸ்!!