ஒரே மாதிரி இருக்கேனா சொந்த அனுபவமா? ரசிகர்கள் கிண்டலுக்கு பதிலளித்த ஜீத்து ஜோசப்!

Published : Feb 24, 2021, 09:26 PM IST
ஒரே மாதிரி இருக்கேனா சொந்த அனுபவமா? ரசிகர்கள் கிண்டலுக்கு பதிலளித்த ஜீத்து ஜோசப்!

சுருக்கம்

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றுவரும் நிலையில், ரசிகர்களின் கிண்டலான மீம்ஸ் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் இயக்குனர்  ஜீத்து ஜோசப்.  

மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ கடந்த வெள்ளியன்று ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் பாராட்டுதல்களையும், வரவேற்பையும் பெற்றுவரும் நிலையில், ரசிகர்களின் கிண்டலான மீம்ஸ் ஒன்றுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் இயக்குனர்  ஜீத்து ஜோசப்.

‘திரிஷ்யம்’ முதல் பாgam எப்படி ரீமேக்கே செய்யப்பட்டதோ, அதே போல் 'திரிஷ்யம் 2 ' படத்தையும் ரீமேக் செய்ய, தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக  தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகி விட்டது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் தெலுங்கிலும் ரீமேக் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் பாகத்தில்,  மோகன்லாலின் மகள் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு கொலையை செய்து விட அந்த கொலையை மறைத்து தண்டனையிலிருந்து தப்புவது தான் முதல் பாகத்தில் கதையாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக, திரிஷ்யம்’ இரண்டாம் பாகத்தில் இந்த கொலை குறித்து போலீசாருக்கு ஒரு துப்பு கிடைக்க மீண்டும் மோகன்லால் குடும்பத்திற்கு குடும்பத்திற்கு சிக்கல் வருகிறது, இதில் இருந்து எப்படி மோகன் லால் குடும்பத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

முதல் பாகம் போலவே, கொஞ்சம் கூட விறுவிறுப்பு.. பரபரப்பு குறையாமல் ஒரு இரண்டாம் பாகம் படம் எந்த கோர்வையில் இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது என படக்குழு என படக்குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

இந்த நிலையில் ’த்ரிஷ்யம்’ படத்தில் மோகன்லால் குடும்பத்தின் புகைப்படத்தையும், ஜீத்து ஜோசப்பின் குடும்ப புகைப்படத்தையும் ஒன்று சேர்த்து, மீம் போட்டு ...   ஜீத்து ஜோசப்பிற்கும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இந்த படத்தின் கதை இயக்குனரின் வாழ்க்கையில் நடந்ததா என்ற கேள்வி கேட்டு கலாய்த்துள்ளனர். இதற்க்கு, மிகவும் ஜாலியாக விளக்கம் அளித்துள்ள ஜீத்து ஜோசப் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Netflix Pandigai : 2026-ல் ஒரு டஜன் தமிழ் படங்களை வாங்கிக் குவித்த நெட்பிளிக்ஸ்... என்னென்ன படங்கள் தெரியுமா?
கிரேட் எஸ்கேப்... ராஜா சாப் படத்தின் பர்ஸ்ட் சாய்ஸ் ‘இந்த’ தமிழ் நடிகரா? - நல்ல வேளை அவர் நடிக்கல..!