
மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும், நடிகர் மோகன் லால் மகள், சமீபத்தில் புத்தம் ஒன்றை எழுதி வெளியிட்ட நினைல் அந்த புத்தகத்தை அமிதா பச்சனுக்கு அவர் அனுப்பி வைக்க அதை பார்த்து வியர்த்து பாராட்டியுள்ளார் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2’ திரைப்படம் சமீபத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக்கே செய்ய தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் ரீமேக் ஆவது குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், விரைவில் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வது குறித்த அறிவிப்புகள் veliyaagum என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மோகன்லால் தனது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனுக்கு அனுப்பி வைத்தார். இந்த புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் மோகன்லால் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது: மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒரு பரிசை அனுப்பி இருக்கிறார். அவரது மகள் விஸ்மயா எழுதிய ’கிரைன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்’ என்ற புத்தகத்தை எனக்கு அனுப்பி உள்ளார். உணர்வுபூர்வமான கவிதைகள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தகத்தை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். மோகன்லால் மகளின் திறமைகள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.