Bigg Boss Aishu: 'என்னை மன்னித்து விடுங்கள்' அம்மா பிறந்தநாளில்.. பிக்பாஸ் ஐஷு போட்ட உருக்கமான பதிவு!

Published : Jan 22, 2024, 09:44 PM IST
Bigg Boss Aishu: 'என்னை மன்னித்து விடுங்கள்' அம்மா பிறந்தநாளில்.. பிக்பாஸ் ஐஷு போட்ட உருக்கமான பதிவு!

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக இருந்த ஐஷு, மிகவும் உருக்கமாக தன்னுடைய சமூக வலைதளத்தில் அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.  

உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் துவங்கி.. சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டான்சர் என்கிற அடையாளத்துடன் கலந்து கொண்ட இளம் வயது போட்டியாளர் தான் ஐஷு.

20 வயது ஆன இவர், நடன கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான அமீருக்கு மிகவும் நெருக்கமானவர். ஆரம்பத்தில் இருந்தே மிகவும் தெளிவாகவும், நிதானமாகவும் விளையாடி வந்த ஐஷு நிக்சனுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதல் டிராக்கில் திசை திரும்பியதாலும், புல்லி கேங்குடன் இருந்ததாலும் 42 வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார்.

Saif Ali Khan Hospitalised: நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது!

ஐஷு வெளியேற ஒருவிதத்தில் நிக்சனும் என்றே கூறப்படுகிறது. அதேபோல் ஐசு பிக்பாஸ் வீட்டுக்குள் இனி தங்களின் மகள் இருக்க வேண்டாம் என ஐஷுவின் பெற்றோர் கேட்டு கொண்டதன் காரணமாகவும், ஐஷு வெளியேற்ற பட்டதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே, பிக்பாஸ் வீட்டுக்குள் மற்ற போட்டியாளர்கள் வந்த போதும் ஐஷு மட்டும் திரும்ப செல்லவில்லை.

இதேபோல் பிரதீப் மீது, தவறு இல்லை என்பதை அறிந்து அவருக்கு ரெட் கார்ட் கொடுத்ததற்காக மிகவும் உருக்கமாக பதிவிட்டு மன்னிப்பு கேட்டார் ஐஷு. தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்து விட்டதாகவும் வேதனை பட்டார். தற்கொலை எண்ணம் வரை சென்று மீண்டு வந்ததாக ஐஷு கூறியது பலரை அதிர்ச்சியடைய செய்தது.

ராமர் கோவில் திறப்பு நாளில்... பிரதமரை டார்கெட் செய்தாரா நடிகை பார்வதி? இன்ஸ்டா பதிவுக்கு MP கனிமொழி ஆதரவு!

தற்போது அணைத்து பிரச்சனைகளில் இருந்து மீண்டு, சகஜ நிலைக்கு வந்துள்ள ஐஷு...  தன்னுடைய அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு,  சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பதிவில்.. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா, எல்லாவற்றை விடவும், உங்களை அதிகம் நேசிக்கிறேன். இதுவரை நான் செய்த அனைத்து குழப்பங்களுக்காகவும், என்னை மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் உங்களின் வேடிக்கையான பக்கம் மட்டுமே தெரியும். ஆனால் நீங்கள் மிகவும் வலிமையான பெண். சிரிப்பு எனும் முகமூடியால் அனைத்தையும் சமாளித்து வருகிறீர்கள். ஒருநாள் நம் பிரச்சனைகளை இருவரும் சேர்ந்து சமாளிப்போம் எனக் கூறியுள்ளார். இந்த பதிவை தொடர்ந்து ஐஷுக்கு பல ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருவதோடு...  ஐஷுவின் அம்மா சைஜிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்