கர்ப்ப காலத்தில் பணிவிடை செய்யும் கணவர்.. கன்னத்தை கடித்து வைத்த அமலா பால் - இன்டர்நெட்டில் செம ட்ரெண்டிங்!

Ansgar R |  
Published : Jan 22, 2024, 09:00 PM IST
கர்ப்ப காலத்தில் பணிவிடை செய்யும் கணவர்.. கன்னத்தை கடித்து வைத்த அமலா பால் - இன்டர்நெட்டில் செம ட்ரெண்டிங்!

சுருக்கம்

Amala Paul Vacation : பிரபல நடிகை அமலா பால் தனது காதலர் ஜகத் தேசாய் என்பவரை கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

தமிழ் சினிமா உலகில், கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான "மைனா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை தான் அமலா பால். அதன்பிறகு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல பல திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சிறப்பான முறையில் நடித்து வந்தார் அமலாபால். 

இந்த சூழலில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பிறகு அவர்களுடைய திருமண உறவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரை விவாகரத்தும் செய்தார். இதற்கு பிறகு சுமார் 6 ஆண்டு காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த அமலா பால் அவர்கள் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் இருந்தும் சற்று ஓய்வு பெற்றார். 

Bhavana wedding Photos: 6-ஆம் ஆண்டு திருமண நாள்! யாரும் பார்த்திராத வெட்டிங் போட்டோசை பகிர்ந்த நடிகை பாவனா!

2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆறு ஆண்டுகளில் பத்துக்கும் குறைவான திரைப்படங்களிலேயே அவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு அவருடைய காதலரான ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அமலா. இவர்களுடைய திருமணம் நடந்த வெகு சில மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்திருந்தார் அமலாபால். 

தனது கணவரோடு சேர்ந்து தனது கர்ப்ப காலத்தில் அவர் செய்யும் சிறு சிறு சேஷ்டைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது கணவருடன் இணைந்து நீச்சல் குளத்தில் நீராடும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அது தான் இப்பொது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

வெண்ணிற சேலையில் வந்த வெண்மதி.. கியூட் கிளாமரில் ரசிகர்களை கவிதை பாட வைத்த ஹன்சிகா - லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!