Vishnu Video: பூர்ணிமா மீது காதலா? விஷ்ணு வெளியிட்டு வீடியோ! என்ன பாஸ் எப்படி சொல்லிடீங்க.!

Published : Jan 22, 2024, 07:47 PM ISTUpdated : Jan 22, 2024, 07:51 PM IST
Vishnu Video: பூர்ணிமா மீது காதலா? விஷ்ணு வெளியிட்டு வீடியோ! என்ன பாஸ் எப்படி சொல்லிடீங்க.!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அரசால் புரசலாக பூர்ணிமா மீதான காதலை வெளிப்படுத்திய விஷ்ணு முதல் முறையாக இது குறித்து, பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.  

சின்னத்திரையில், ஆபிஸ், சத்யா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான விஷ்ணு... வெள்ளித்திரை வாய்ப்புக்காக தேர்வு செய்த ஷார்ட் ரூட்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சீரியஸான கண்ட்ஸ்டெண்டாக விளையாடிய விஷ்ணு, அவ்வப்போது பூர்ணிமா மீது தனக்கு இருந்த விருப்பத்தையும் வெளிக்காட்டியதை பார்க்கமுடிந்தது.

இவர் மட்டும் அல்ல, பூர்ணிமாவும் அப்படி தான்... விஷ்ணு என்ன செய்தாலும், அதனை உடனே மன்னித்து அவரை ஏற்றுக்கொள்வார். இப்படி பல முறை விஷ்ணுவை சைட்டு அடிக்க மாயா அதை கலாய்த்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே பூர்ணிமா, மாயாவுடன் சேர்ந்து அவப்பெயருக்கு ஆளாகினாலும்...எலிமினேஷனில் இருந்து தப்பி வந்தார். வெற்றிகரமாக 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நின்று விளையாடிய இவர், 98-ஆவது நாளில், பிக்பாஸ் கொடுத்த 16 லட்சம் பணப்பெட்டியுடன் மூட்டையை கட்டினார்.

பல எலும்பு முறிவுகள்.. தசை நார் கிழிவு! 'மிஷன் சேப்டர் 1' படத்திற்கு அருண் விஜய் பட்ட வலி வேதனையின் போட்டோஸ்!

ஆனால் விஷ்ணு முதல் ஃபைனலிஸ்ட்டாக டிக்கெட் டூ ஃபின்னாலே நிகழ்ச்சியில் தேவானார். ஃபைனல் வரை சென்ற போதிலும், கப்பை அர்ச்சனாவிடம் கோட்டை விட்ட விஷ்ணு மூன்றாவது ரன்னரப்பாக வெளியேறினார். அர்ச்சனாவின் வெற்றியை வெடி போட்டு கொண்டாடிய விஷ்ணுவிடம், ரசிகர்கள் பலர், பூர்ணிமா மீதான காதல் குறித்து, எழுப்பிய கேள்விக்கு வீடியோ போட்டு தற்போது பதில் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், தனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். அங்கு இருக்கும் போது வேறு... வெளியில் வந்ததும் வேறு என... என்ன சொல்வது என தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு வெட்கத்தோடு விஷ்ணு பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது படு வைரலாகி வருகிறது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!