'பாரதி கண்ணம்மா' சீரியலில் இத்தனை வருடங்கள் மறக்கப்பட்ட உண்மைகள் ஒவ்வொன்றும் வெளியாக துவங்கி விட்டதால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பக்கா பதிலோடு சீரியல் நடிகர்கள் இயக்குனருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
விஜய் டிவி தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்... கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களின் ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
அம்மாவை இழந்து தந்தை மற்றும் சித்தி அரவணைப்பின் வளரும் கண்ணம்மா சித்தி கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அவரை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டியது என நினைக்கும் சித்தியின் சுய ரூபத்தை அறிந்த டாக்டர் பாரதி, ஒரு நிலையில் கண்ணம்மா மீது காதல் கொள்ள இருவரும் பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஒன்று சேர்ந்து தங்களுடைய வாழ்க்கையை துவங்குகிறார்கள்.
undefined
சர்ச்சைக்குரிய வாடகைத் தாய் கான்செப்ட் சமந்தாவுக்கு கைகொடுத்ததா?... யசோதா படத்தின் விமர்சனம் இதோ
தன்னுடைய மகனுக்கு அழகிய மருமகளை திருமணம் செய்து வைக்க நினைக்கும் பாரதியின் அம்மா கண்ணம்மா மீது வெறுப்பை நெருப்பாக கொட்ட, கண்ணம்மாவின் உண்மையான நல்ல குணத்தை அறிந்து அவரும் மாறுகிறார், மாமியார் மாறிய போது.. கண்ணம்மா மீது பாரதிக்கு சந்தேகம் எழுகிறது. இதற்கு முழு காரணமும் பாரதியின் தோழி என அவரையே சுற்றிக் கொண்டிருக்கும் வெண்பா தான். வெண்பா பாரதியை காதலிப்பதால், அவரை அடைய வேண்டும் என்பதற்காக கண்ணம்மா வயிற்றில் வளர்வது பாரதியின் குழந்தை அல்ல என நம்ப வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் கண்ணம்மாவிற்கு பாரதியின் சந்தேக குணம் தெரிய வர அவரை விட்டு பிரிய முடிவு செய்து பேக்கை கையில் தூக்கிக்கொண்டு பல மையில் தூரம் நடந்தே சென்றார். இதை வைத்து பல்வேறு ட்ரோல்ஸ் சமூக வலைதளத்தில் தெறித்தன. பின்னர் ஒருவழியாக இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கிறார் கண்ணம்மா. இதில் ஒரு குழந்தையை கண்ணம்மாவின் மாமியார் தூக்கி சென்று விட, தனக்கு பிறந்தது ஒரே மகள்தான் என லட்சுமியோடு ஏதோ ஒரு கிராமத்தில் வாழ்ந்து வரும் கண்ணம்மா சூழ்நிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு வருகிறார்.
அப்போது தன்னுடைய மற்றொரு மகளான ஹேமா மற்றும் கணவர் பாரதி, மாமியாரை சந்திக்க நேரிடுகிறது. மேலும் இத்தனை நாள் மறைக்கப்பட்டு வந்த உண்மையான கண்ணம்மா தான் ஹேமாவின் தாய் என்பதையும் ஹேமா தெரிந்து கொள்கிறார். எனவே தாய் கண்ணம்மாவுடன் புறப்பட முடிவெடுத்துவிட்டார் ஹேமா. ஆனால் மகளை பிரிய மனமும் இல்லாமல், டி.என்.ஏ டெஸ்ட் இன்னும் கைக்கு கிடைக்காததால் பாரதி என்ன முடிவு செய்வார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
மேலும் சீரியல் ஓரளவிற்கு இறுதி கட்டத்தை எட்ட உள்ளது போன்று, காட்சிகள் காட்டப்பட்டு வருவதால், மக்களும் எப்போது சீரியலை முடிப்பீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இப்போதைக்கு எங்களுக்கு எண்டு இல்லை என இயக்குனர் பிரவீன் பென்னட்டுடன் சேர்ந்து, 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்கள் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.