
நடிகை சமந்தா நடிப்பில் திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ள திரைப்படம் யசோதா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் வாடகைத் தாயாக நடித்துள்ளார் சமந்தா. ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்து உள்ளார். சமந்தா உடன் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அதன்படி யசோதா படம் நேர்த்தியான எமோஷனல் திரில்லர் என்றும், சமந்தா தான் இப்படத்தின் உயிர்நாடியாக உள்ளதாகவும் நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்ற கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக கூறியுள்ள அவர் பின்னணி இசை, விஷுவல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளும் படத்தின் கான்செப்டும் அருமையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள பதிவில், யசோதா திரைப்படம் டுவிஸ்ட் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் கூடிய சிறந்த எமோஷனல் திரில்லர் படம். சமந்தாவின் நடிப்பு வெறித்தனமாக இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
யசோதா மூலம் சமந்தா மற்றுமொரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துள்ளதாக நெட்டிசன் ஒருவர் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.
மற்றொரு பதிவில், யசோதா என்ன ஒரு அருமையான படம் என வியந்து பாராட்டி உள்ள நெட்டிசன், சமந்தாவின் நடிப்பு வேறலெவலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சமந்தா இதுவரை நடித்த படங்களில் யசோதாவில் தான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும், மொத்த திரைப்படமும் திருப்பங்களும் டுவிஸ்டுகளும் நிறைந்து இருப்பதால் படம் நிச்சயம் ஹிட் என குறிப்பிட்டு, சமந்தாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யசோதா சிறந்த திரில்லர் படம் என பாராட்டியுள்ள நெட்டிசன் ஒருவர், படத்தின் கான்செப்ட் சுவாரஸ்யமாக இருப்பதாகவும், பின்னணி இசையும் சிறப்பாக இருந்ததாக பதிவிட்டுள்ள அவர், சமந்தாவின் நடிப்பு மெர்சலாக இருந்ததாக பாராட்டி உள்ளார். அதேபோல் வரலட்சுமியும் இதுபோன்று ஏராளமான நல்ல வேடங்களில் நடிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யசோதா படத்திற்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தற்போது மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகை சமந்தாவுக்கு, இப்படத்தின் வெற்றி புத்துணர்ச்சியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை தட்டிதூக்கிய ரெட் ஜெயண்ட்... காத்துவாக்குல ரிலீஸ் தேதியை கசியவிட்ட உதயநிதி