
‘என்னை அறிந்தால்’,‘விஸ்வாசம்’ ஆகிய படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்து கவனம் ஈர்த்தவர் அனிகா சுரேந்திரன். ழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா சுரேந்திரன் இப்பொது வளர்ந்து முழுநேர கதாநாயகி அவதாரம் எடுக்க தயாராகி வருகிறார். சமீபத்தில் வெளியான 'குயின்' தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இளம்வயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். மற்றொருபுறம் மாடலிங்கிலும் கலக்கி வருகிறார்.
16 வயதே அனிகா சுரேந்திரன் கொஞ்சம் கிளாமராக வெளியிடும் போட்டோக்களுக்கே ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்புவது வழக்கம். அப்படியிருக்க கறுப்பு நிறத்தில் சல்லடை போன்ற படுமோசமான ஆடையில் அனிகா நடனமாடுவது போன்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஆனால் அனிகாவின் ரசிகர்கள் பலரும் அப்போதே அது ஒரு மார்ப்பிங் வீடியோ, அதில் இருப்பது அனிகா கிடையாது என ஆணித்தரமாக எடுத்துரைத்து வந்தனர்.
இதையும் படிங்க: தோளில் இருந்து நழுவும் ஸ்டைலிஷ் உடையில்... ‘குட்டி நயன்’ அனிகா கொடுத்த அட்ராசிட்டி போஸ்கள்...!
இந்நிலையில் அந்த வீடியோ குறித்து அனிகாவே விளக்கமளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது நான் கிடையாது. இப்படியெல்லாம் நான் செய்யவே மாட்டேன். அது மார்ப்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பதால் அதனை அனைவரும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: விஜே சித்ராவை கடித்து குதறிய ஹேமந்த்... அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக நண்பர் ‘பகீர்’ வாக்குமூலம்...!
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அனிகா, “உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அது என்னை சிறிது மனதளவில் தொந்தரவு செய்கிறது. அதை பார்த்த பொழுது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அதை சிறந்த முறையில் மார்பிங் செய்துள்ளனர். அதை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. நாங்கள் அதை இணையதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.