நான் விஜய்க்கு வில்லனா?... நடிகர் அருண் விஜய்யின் திட்டவட்டமான விளக்கம்...!

Published : Jan 21, 2021, 03:21 PM IST
நான் விஜய்க்கு வில்லனா?... நடிகர் அருண் விஜய்யின் திட்டவட்டமான விளக்கம்...!

சுருக்கம்

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் அருண் விஜய். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டரில் வெளியான மாஸ் ஹீரோ படம் என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இதையடுத்து நயன்தாராவுடன் ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அடுத்தப் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தலைப்பு வைக்கப்படாத இந்த படம் தற்காலிகமாக தளபதி 65 என அழைக்கப்படுகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹேக்டே தளபதி 65 படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் அருண் விஜய்யை வில்லனாக நடிக்க வைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதற்கு முன்னதாக என்னை அறிந்தால் படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் அருண் விஜய். எனவே தளபதிக்கும் அவரையே வில்லனாக நடிக்கவைக்கலாம் என பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இதை அருண் விஜய் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளதோடு, வதந்தி என்றும் விளக்கம் அளித்துள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ajith: அஜித் படம் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கும் ஷாலினி... சர்ப்ரைஸாக வெளிவந்த AK 64 பட டைட்டில்..!
Top 10 Big Budget Movies: கோடி கோடியாய் கொட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 10 மெகா பட்ஜெட் மூவீஸ்!