காலில் அறுவை சிகிச்சை... கமல் டிஸ்சார்ஜ் குறித்து வெளியான பரபரப்பு தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 21, 2021, 02:48 PM IST
காலில் அறுவை சிகிச்சை... கமல் டிஸ்சார்ஜ் குறித்து வெளியான பரபரப்பு தகவல்...!

சுருக்கம்

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கமல் ஹாசன் விரைவில் நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

​மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல் ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்தார். அதன் பின்னர் அவர் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியும் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவடைந்தது. இதையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்குவார் என்று தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அதில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தால் காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும் என்றும் நம்பிக்கை கொடுத்திருந்தார். 

இந்நிலையில் கடந்த 18ம் தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு, மறுநாள் நல்ல படியாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. அன்றைய தினம் கமலின் மகள்களான ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் இருவரும் ஒன்றாக வெளியிட்டிருந்த கூட்டு அறிக்கையில், அப்பாவிற்கு நல்ல படியாக காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்ததாகவும், மருத்துவர்கள் குழு, மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் இருந்தனர். மேலும் நான்கைந்து நாட்களில் அப்பா வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். 


இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கமல் ஹாசன் அவர்கள் ராமச்சந்திரா மெடிக்கல் சென்டரில் வலது காலில் எலும்பில் ஏற்பட்ட தொற்றிற்கான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அந்த தொற்றை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையானது மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: விஜே சித்ராவை கடித்து குதறிய ஹேமந்த்... அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியதாக நண்பர் ‘பகீர்’ வாக்குமூலம்...!

தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள கமல் ஹாசன் விரைவில் நாளை வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் ஒருவாரமோ அல்லது 10 நாட்களோ ஓய்வில் இருக்க உள்ள கமல் ஹாசன், காணொலி மூலமாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கயாடு லோஹர் முதல் த்ரிஷா வரை: 2025-ல் அதிகம் பேசப்பட்ட, சோஷியல் மீடியை கலக்கிய டாப் 6 நடிகைகளின் பட்டியல்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!