ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” பூஜையுடன் துவங்கியது..!

By manimegalai aFirst Published Jan 21, 2021, 12:56 PM IST
Highlights

"ருத்ரன்”  பட பூஜையில், நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகை பிரியா பவானி ஷங்கர், தயாரிப்பாளர் கதிரேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'ஜிகர்தண்டா' போன்ற வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் அடுத்ததாக, நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கும், “ருத்ரன்” படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

K.P.திருமாறன் கதை, திரைக்கதை எழுத “ருத்ரன்” படத்தை கதிரேசன் இயக்குகிறார். இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்தில், நாசர், பூர்ணிமா ஜெயராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த இந்த படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. 

click me!