சுஷாந்த் சிங்கை போல் மர்ம மரணம்... இறந்த நிலையில் இளம் நடிகர் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு

Published : Jul 30, 2022, 03:04 PM IST
சுஷாந்த் சிங்கை போல் மர்ம மரணம்... இறந்த நிலையில் இளம் நடிகர் பிணமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு

சுருக்கம்

Sarath Chandran : மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சரத் சந்திரன் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் கடந்த 2020-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் அவரது மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது போலீஸ். அவரது மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், தற்போது அதேபோல் ஒரு மர்ம மரணம் மலையாள திரையுலகிலும் நிகழ்ந்துள்ளது. மலையாளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் சரத் சந்திரன் தான் தற்போது இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 37.

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன சூப்பர் ஸ்டோரி... கிரீன் சிக்னல் காட்டிய சிம்பு - முதன்முறையாக இணைய உள்ள மாஸ் கூட்டணி!

கொச்சியை சேர்ந்த சரத் சந்திரன், முதலில் ஐடி ஊழியராக பணியாற்றி வந்தார். பின்னர் சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி பின்னர் படங்களில் நடிக்கத்தொடங்கினார். இவர் அனீஸ்யா என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் திடீரென மரணமடைந்து இருப்பது மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. போலீசாரும் இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சரத் சந்திரனின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மருமகன் மீது கொலை முயற்சி புகார்: 'கார்த்திகை தீபம் சீரியல் கார்த்திக் அதிரடி கைது!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: வெடித்த உண்மை! மாமனாரின் தலையில் போட அண்டாவை தூக்கிய சரவணன்!