
மும்பை அந்தேரி பகுதியில் அமைந்துள்ள சித்ரகூட் என்கிற மைதானத்தில் ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிந்து இறுதியில் அங்கு பொருத்தப்பட்டுள்ள ஒளிவிளக்குகள் சரிவர ஒளிர்கிறதா என்பதை சோதிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
அப்போது மின்கசிவு ஏற்பட்டதில் நேற்று மாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீ மளமளவென பரவியதில் அந்த செட் முழுவதும் எரிந்து நாசமாகியது. அந்த செட்டில் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நடிகர், நடிகைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் போனி கபூர் நடிகராக அறிமுகமாக உள்ளார்.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம்... லெஜண்ட் பட நாயகிக்கு வாரி வழங்கிய அண்ணாச்சி - எத்தனை கோடி தெரியுமா?
இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளார். இதில் செட் முழுவதும் எரிந்து நாசமானது. இதனால் படக்குழுவுக்கு ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ரன்பீர் கபூரும், ஷ்ரத்தா கபூரும் நேற்று வேறு சில வேலைகளில் பிசியாக இருந்ததனால் ரிகர்சலில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இப்படத்தை இயக்குனர் லவ் ரஞ்சன் என்பவர் இயக்க உள்ளார். இந்த செட்டில் பிரம்மாண்ட பாடல் காட்சி படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா அதுக்கு அவர் தான் பொறுப்பு - ரஜினி பட வில்லன் மீது விஷால் பட நடிகை பரபரப்பு புகார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.