tanushree dutta : சட்டம் தன் பக்கம் துணை நிற்காமல் போனால், மக்கள் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விஷால் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் தீராத விளையாட்டு பிள்ளை. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடித்திருப்பார்கள். அதில் ஒருவர் தான் தனுஸ்ரீ தத்தா. பாலிவுட் நடிகையான இவர் இப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார்.
நடிகை தனுஸ்ரீ தத்தா, பிரபல வில்லன் நடிகரான நானா படேகர் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தி படம் ஒன்றில் நடித்தபோது நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறிய புகாரில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் அந்த வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படியுங்கள்... துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!
இதையடுத்து நானா படேகர், நடிகை தனுஸ்ரீ தத்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தா, சமூக வலைதளத்தில் நானா படேகருக்கு எதிராக போட்டுள்ள சமூக வலைதள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு நானா படேகரும், அவரது வக்கீல்களும், அவரது மாஃபியா நண்பர்களும் தான் காரணம் என கூறி உள்ளார்.
பாலிவுட் மாஃபியா கும்பல் என்றால், நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்தின் போது ஒருசிலரின் பெயர்கள் வெளியே வந்ததே அவர்கள் தான். என்னை துன்புறுத்திய அவர்களின் வாழ்க்கையை நரகமாக்குமாறும், சட்டம் தன் பக்கம் துணை நிற்காமல் போனாலும், மக்கள் மீது தனக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகவும் தனுஸ்ரீ அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் நானா படேகர் ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட டபுள் மடங்கு சம்பளம்... லெஜண்ட் பட நாயகிக்கு வாரி வழங்கிய அண்ணாச்சி - எத்தனை கோடி தெரியுமா?