Amitabh Bachchan ; ரஜினி சார்... இது டூ மச்.. தலைவரின் வாழ்த்துக்கு பதிவுக்கு அமிதாப் பச்சன் கொடுத்த பதில்!

Published : Oct 12, 2022, 05:42 PM ISTUpdated : Oct 12, 2022, 05:46 PM IST
Amitabh Bachchan ; ரஜினி சார்... இது டூ மச்.. தலைவரின் வாழ்த்துக்கு பதிவுக்கு அமிதாப் பச்சன் கொடுத்த பதில்!

சுருக்கம்

நடிகர் அமிதாப் பச்சன் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடியதற்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்து அமிதாப் பச்சன் பதில் ட்விட் செய்துள்ளார்.  

பாலிவுட் திரையுலகின்  சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவர் நேற்று தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடினார். 80 வயதிலும் இவர் தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு அனைத்து திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும், தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்: Nayanthara: நயன்தாரா - விக்னேஷ் சிவன் குழந்தைகளின் வாடகை தாய் யார் தெரியுமா ? வெளியான பரபரப்பு தகவல்..!

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டர் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதில் அமிதாப்பச்சனை லெஜன்ட் என்று குறிப்பிட்டு, அவர் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தியவர் நமது புகழ்பெற்ற இந்திய திரை உலகின் உண்மையான சூப்பர் ஹீரோ 80 வயதில் நுழைகிறார் என தன்னுடைய வாழ்த்து குறிப்பில் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: Sneha Birthday: தூங்கி எழுந்த முகம்... மழை... வானவில்லை ரசித்தபடி இயற்கையோடு பிறந்தநாள் கொண்டாடும் சினேகா!
 

இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் வாழ்த்துச் செய்திக்கு அமிதாபச்சன் பதில் ட்விட் போட்டுள்ளார். அதில் ரஜினி சார்... நீங்கள் எனக்கு டூ மச் கிரெடிட் கொடுத்துள்ளீர்கள். உங்கள் அபாரமான உயரத்தோடும், பெருமையோடும், என்னை எப்போதும் ஒரு ஒப்பிட முடியாது. நீங்கள் ஒரு சக நடிகர் மட்டுமின்றி, மிகவும் அன்பான நண்பர்... உங்களுக்கு என் அன்பும் நன்றியும் என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?