Biggboss Tamil: ஜிப் போடாமல் சிக்கிய ஜிபி முத்து!அண்ணா அண்ணான்னு கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்திட்டேயே மா!

By manimegalai a  |  First Published Oct 12, 2022, 1:51 PM IST

ஜிபி முத்துவை அண்ணா...  அண்ணா... என்று கூப்பிட்டு, கடைசியில் ஜிப் போடாததை சுட்டிக்காட்டி அசிங்கப்படுத்தியுள்ளார் மகேஸ்வரி.
 


எதிர்பாராத போட்டியாளர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பரபரப்பாக துவங்கியது பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி. கடந்த சீசன் முதல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த முறை 21 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. மேலும் ஒரு சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருந்த மைனா நந்தினி வெளியேறியதை தொடர்ந்து 20 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்

கடந்த 2 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் பெரிதாக எந்த பிரச்னையும் நடைபெற வில்லை என்றாலும்,அசல் கோளாறு கூறிய வார்த்தையால் ஆயிஷா மனம் நொந்து அழுதார். இதைத் தொடர்ந்து ஆயிஷாவை மற்ற போட்டியாளர்கள் டார்கெட் செய்வதுபோல் தெரிகிறது. ஜனனி நாமினேஷனில் அவரை சிக்க வைத்த போது ஆயிஷா வாக்குவாதம். பின்னர் நான் எதுவும் பேசவில்லை, என கூறி செம்ம அப்சட் ஆனார்.

மேலும் செய்திகள்: ஹிஜாப்புக்கு எதிர்ப்பு... ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை
 

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் பல கலகப்பான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதாவது மகேஸ்வரி பாத்ரூம் செல்ல சென்றபோது, அனைத்து பாத்ரூம்களிலும் ஆட்கள் இருந்ததால் அமுதவாணனை அழைக்கிறார். அமுதவாணன் ஏண்டா இங்க வந்து கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா... என்று கலகலப்பாக கேட்க, பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வரும் ஜிபி முத்து ஜிப் போட மறந்து விடுகிறார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திரும்பி நின்றபடி ஜிப் போடுகிறார். இதைப் பார்த்த அமுதவாணன், ஏன் அப்படி திரும்பி நிற்கிறார் என்று கேட்க, அவர் ஜிப் போடல அதான் திரும்பி நின்று ஜிப் போடுகிறார் என கூறுகிறார். இதனை நெட்டிசன்கள் ஜிபி முத்துவை அண்ணா... அண்ணா என கூப்பிட்டு விட்டு தங்கையே அவரை அசிங்கப்படுத்தலாமா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 
 

click me!