பிக்பாஸில் அடுத்தடுத்து எண்ட்ரி கொடுத்த கேரளா பியூட்டீஸ் ஆயிஷா மற்றும் ஷெரினா

By Ganesh A  |  First Published Oct 9, 2022, 8:23 PM IST

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கேரளாவை சேர்ந்த சின்னத்திரை நடிகை ஆயிஷா மற்றும் மாடல் அழகி ஷெரினா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கோலாகலமாக தொடங்கி உள்ளது. இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களை ஒவ்வொருவராக நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் முதலாவது டிக்டாக் புகழ் ஜிபி முத்து எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சுயாதீன இசைக்கலைஞர் அசல் கோலார், திருநங்கை ஷிவின், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், சின்னத்திரை நடிகர் அசீம் ஆகியோர் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர்.

இதையடுத்து இரண்டு பெண் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினர். அவர்கள் பெயர் ஆயிஷா மற்றும் ஷெரினா. இதில் முதலாவதாக ஆயிஷா எண்ட்ரி கொடுத்தார். இவர் சத்யா என்கிற சீரியலின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ஆவார். கெரியரை தாண்டி பிக்பாஸ் செல்வதற்கான காரணம் என்னவென்றால் என்னை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆயிஷா கூறினார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... சிவானியுடன் காதல் சர்ச்சை... மனைவியுடன் விவாகரத்து - பிக்பாஸில் நுழைந்த சின்னத்திரை ஹீரோ அசீம்

இல்லத்தில்.. - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/DKP825Ubvq

— Vijay Television (@vijaytelevision)

அடுத்ததாக ஷெரின் வர்கை தந்தார். மாடல் அழகியான இவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையோடு சென்னைக்கு வந்துள்ளார். மாடலிங்கில் சக்சஸ்புல்லாக இருந்த இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது சினிமாவிலும் சாதிக்கும் முனைப்போடு பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆயிஷா, ஷெரின் இருவருமே கேரளாவை சேர்ந்தவர்கள். வழக்கமாக தமிழ்நாட்டில் மலையாள நடிகர், நடிகைகளுக்கு எப்போதுமே மவுசு உண்டு. அந்த வகையில் பிக்பாஸுக்கு பின்னர் ஆயிஷாவும், ஷெரினாவும் சினிமாவில் நாயகிகளாக கலக்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இல்லத்தில்.. - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/J1YRradBGn

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... நான் வாய்ப்பு தேடி பிக்பாஸ் வீட்டிற்குள் போகல... வேற காரணம்? வனிதாவின் முன்னாள் காதலனை இறக்கிய பிக்பாஸ்!

click me!