பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் இதோ? யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா

By Kanmani P  |  First Published Oct 4, 2022, 11:05 AM IST

இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளவர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம் எனும் விளம்பரத்தையும் இந்நிகழ்ச்சிதாரர்கள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றுதான் பிக் பாஸ். இந்த ஷோ ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் மிகப் பிரபலம். பிக் பாஸ் ஷோவில் 100 நாட்கள் தனிமையான ஒரு வீட்டில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்படுவர். சுற்றிலும் இருக்கும் கேமராக்கள் மூலம் அவர்கள் இன்ச் பை இன்ச் ஆக கவனிக்கப்பட்டு வருவர். அதோடு அந்த வீட்டில் இருந்து வெளிவரும் வரை அவர்களுக்கு சமூகத் தொடர்பே இருக்காது. இவ்வாறு உள்ளிருக்கும் நபர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களது நடத்தையை பொறுத்து ரசிகர்களால் தேர்வு செய்யப்பட்டு வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுகின்றன.

நம் தமிழகத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் ஷோவை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதன் ஆறாவது சீசன் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. விஜய் டிவிகள் ஒளிபரப்பாக உள்ள இந்த ஆறாவது சீசனை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 18 பிரபலங்களும்  ஆறு சாமானியர்களுடன் ஒளிபரப்பாக உள்ளதாம் பிக் பாஸ் ஷோ.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு....பல்கலை கழகத்தில் சாமி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரஷ்மிகா... படு ஜோராக நடக்கும் 'குட் பை' பட புரமோஷன்!

இதில் கலந்து கொள்ள உள்ளவர்களின் லிஸ்டை இங்கு காணலாம்....

  • மைனா நந்தினி,
  • மதுரை முத்து,
  • பாடகி ராஜலட்சுமி,
  • சீரியல் நடிகை ஆயிஷா,
  • விஜே மகேஸ்வரி
  • அமுதவாணன்,
  • டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ,
  • சீரியல் நடிகை ஸ்ரீநிதி,
  • சீரியல் நடிகர் மணிகண்டன்,
  • ஜிபி முத்து  
  • மாடலிங்  ஷரினா உள்பட 13 போட்டியாளர்கள் பங்கேற்க இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு... தெறிக்கும் இசை - அதிரும் கதைக்களம் பாலிவுட்டை மிரட்டிய ‘விக்ரம் வேதா’ இயக்குனர் - இசையமைப்பாளர்..!

மேலும் சில பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொள்ள உள்ளவர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளலாம் எனும் விளம்பரத்தையும் இந்நிகழ்ச்சிதாரர்கள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!