நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...8 வருட மெஹா தொடருக்கு என்டுகார்ட் போடும் சன் டிவி

Published : Oct 04, 2022, 03:42 PM ISTUpdated : Oct 04, 2022, 03:44 PM IST
நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு...8 வருட மெஹா தொடருக்கு என்டுகார்ட் போடும் சன் டிவி

சுருக்கம்

இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகிவிட்டது.

சின்னத்திரை தொடர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. வெள்ளி திரையை காட்டிலும் சின்னத்திரை மூலம் பிரபலமானவர்கள் பலருண்டு. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் என சீரியலுக்கான தனி சேனல்களும் இருக்கின்றன. இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை கவர்ந்திழுத்த சீரியல் தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சிகளில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல் மிகப் பிரபலம்.

 ஸ்வேதா பண்டேகர், நாகஸ்ரீ ஜிஎஸ், சந்தியா ஜாகர்லமுடி, ஜெய் தனுஷ் மற்றும் அருண் குமார் ராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த வந்தனர். ஏபி ராஜேந்திரன் என்பவர் இயக்கி வந்தார். 2000 எபிசோடுகளை கடந்து இந்த சீரியல் எட்டு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சகோதரிகளான இருவர் ஒரு தாய் பிள்ளைகளான லேகா மற்றும் சந்திராவை தனித்தனியே வளர்த்தெடுக்கின்றனர். லேகா வக்கீலாகவும், சந்திர பத்திரிகையாளராகவும் இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் சகோதரிகள் என்று தெரிந்த பிறகு ஒற்றுமையாகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...சேலைக்கு மாறிய தமன்னா...ஸ்லீவ் லெஸ் அணிந்து கிக் போஸ் இதோ

அப்போது திடீரென ஒரு வில்லி முளைக்கிறார். லேகாவின் கணவரான சபரியை திட்டம் போட்டு மாட்டி விட முயல்கிறார். பின்னர் அந்த வில்லியான சரண்யாவை கொலையாளி என கண்டறிந்து ஜெயிலுக்கு அனுப்பிய பிறகு சந்திர, லேகா இருவருக்கும் பெண் குழந்தைகள்  பிறக்கின்றன. பின்னர் சரண்யா தனக்கு கேன்சர் இருப்பதாக கூறி பாவமன்னிப்பு கேட்டு வெளியில் வருகிறார். இருந்தும் அடங்காத அவர் மீண்டும் லேகா மற்றும் சபரியை பழிவாங்கியேதீருவேன் என முடிவு செய்கிறார்.


இதற்கிடையே பவானி - சூர்யா இருவரின் திருமணம் மற்றும் அவரது தாய் தந்தையை கொலை செய்தவர்களை கண்டறிதல் என சீரியல் நீண்டு கொண்டே சென்றது. இந்நிலையில்  இந்த சீரியலுக்கு என்டுகார்டு  போடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியிட்டுள்ள புகைப்படத்துடன்  மிக நீண்ட தொடரான சந்திரலேகா முடிவு பெறுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சீரியலுக்கு பதிலாக புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோவும் தற்போது வெளியாகிவிட்டது.

மேலும் செய்திகளுக்கு....ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் பார்ப்பவர்களை பதற வைக்கும் கிருத்தி ஷெட்டி...

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
துண்ட காணோம், துணிய காணோம் என்று தெரிச்சு ஓடிய வில்லன்ஸ்- அசால்ட்டா ரிவெஞ்ச் எடுத்த கார்த்திக்!