
டீக்கடைக்காரரை தாக்கி கள்ளாப் பெட்டியில் இருந்து பணம் பறித்ததுடன், காவல் நிலையத்திலும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட நடிகை பாபிலோனாவின் சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை, (38) அப்பகுதியில் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந் நிலையில் நேற்று இரவு அங்கு ஜீப்பில் வந்த சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் குமார். தன் செலவுக்கு பணம் தரும்படி சேர்மதுரையிடம் கேட்டார், இதைக் கேட்டு ஒன்றும் புரியாத சேர்ம துரை, பணமா? பணமெல்லாம் தர முடியாது, நீங்கள் யார்? எதற்காகப் என்னிடம் பணம் கேட்கிறீர்கள் என்று சேர்ம துரை கேட்க, விக்கி சேர்மதுரையை கடுமையாக தாக்கினார்.
பின்னர் டீக்கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்து நொறுக்கினார். பின்னர் கல்லாப் பெட்டியில் இருந்து 1500 ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்ட விக்கி, தனது ஜீப்பில் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்: ஹிஜாப்புக்கு எதிர்ப்பு... ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை
இதனையடுத்து சேர்ம துரை இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து விக்கியை பிடித்து காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
இதையும் படியுங்கள்: இந்திய சினிமாவின் சூப்பர்ஹீரோ... தி லெஜண்ட் சார் நீங்க - அமிதாப் பச்சனுக்கு தன் ஸ்டைலில் வாழ்த்து சொன்ன ரஜினி
அப்போது குடிபோதையில் இருந்த விக்கி, காவல் நிலையத்தில் போலீசாரை மிகவும் தரக்குறைவாக பேசி ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடத்தில் இருந்து 100 ரூபாய் பணம் மற்றும் ஒரு வீச்சரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிறகு விக்கி குறித்து விசாரித்ததில் விக்கி நடிகை பாபிலோனாவின் சகோதரர் என்பதும் ஏற்கனவே விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிந்தது. விக்கி மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது. இது விருகம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.