ஹிஜாப்புக்கு எதிர்ப்பு... ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை

By Ganesh A  |  First Published Oct 12, 2022, 10:43 AM IST

ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடிகை எல்னாஸ் நோரூசி ஆடைகளை கழற்றி அரைநிர்வாண கோலத்தில் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.


ஈரானில் சிறுமிகளும் கட்டாயம் அணிய வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, அதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், மாஷா அமினி என்கிற 22 வயது பெண் அணிந்திருந்த முக்காடு கழன்று விட்டதால் போலீசார் அவரை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் கடந்த மாதம் 17-ந் தேதி உயிரிழந்தார்.

மாஷா மீதான வன்முறைத் தாக்குதலை கண்டிக்கும் விதமாகவும், கட்டாய ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை தீயிட்டு கொளுத்தியும், அதை கழற்றி வீசியும் தங்களது எதிர்ப்புக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கடந்த மாதம் 20-ந் தேதி தெஹ்ரானில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தின் போது காணாமல் போன நிகா ஷகராமி என்கிற 17 வயது சிறுமி சில நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... திரையரங்குகளில் சக்கைப்போடு போட்ட சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Elnaaz Norouzi (@iamelnaaz)

அந்த சிறுமியின் மரணத்தை அடுத்து ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்திற்கு ஈரானிய நடிகை எல்னாஸ் நோரூசியும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்காக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோ உலகமெங்கும் வைரலாகி வருகிறது.

அதற்கு காரணம் அந்த வீடியோவின் ஆரம்பத்தில் ஹிஜாப் அணிந்திருக்கும் நடிகை எல்னாஸ் நோரூசி, பின்னர் அதனை கழற்றுகிறார். அதன்பின்னர் தான் அணிந்திருக்கும் ஆடையை கழற்றும் அவர், இறுதியில் உள்ளாடையையும் கழற்றி வீசி என் உடல் எனது விருப்பம் என ஹிஜாப்புக்கு நூதன முறையில் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் அதிவலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்த காவ்யா... அடுத்த முல்லை யார் தெரியுமா?

click me!