சத்தமில்லாமல் விஜய் சேதுபதி படத்தில் கமிட் ஆன அஜித் பட நாயகி! தொடரும் பட வேட்டை..!

Published : May 28, 2020, 02:19 PM ISTUpdated : May 29, 2020, 02:03 PM IST
சத்தமில்லாமல் விஜய் சேதுபதி படத்தில் கமிட் ஆன அஜித் பட நாயகி! தொடரும் பட வேட்டை..!

சுருக்கம்

தல அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை, சமீப காலமாக தொடர்ந்து பட வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.  

தல அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகை, சமீப காலமாக தொடர்ந்து பட வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ள படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பிராமணர் குறித்து சர்ச்சை வசனம்... உச்ச கட்ட ஆபாச காட்சிகள்..! பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் "காட்மேன்' டீசர்!
 

இயக்குனர் மணிரத்னம் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா நடித்த '5 ஸ்டார்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா. இந்த படத்தை தொடர்ந்து, மாதவன் நடித்த எதிரி, சேரன் நடித்த ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் படங்களை தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.

 

தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தும் இவரால் முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் மலையாள மொழி படங்கள் இவருக்கு கை கொடுத்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் செய்திகள்: வலியால் துடித்த ராதிகா ஆப்தேவிடம் ரூமுக்கு வரவானு கேட்ட தமிழ் நடிகர்! அதிமீறிய வார்த்தையால் கடுப்பான நடிகை!
 

திருமணத்திற்கு பின், குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தமிழில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'ஓகே கண்மணி' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ரீ - என்ட்ரி கொடுத்த பிறகு, சமீப காலமாக நடிகை கனிகா தீவிரமாக படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில் இவரின் கை வசம் தற்போது நடிகர் விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா', படம் இருந்த நிலையில். தற்போது 'யாதும் ஒரே யாவரும் கேளீர்' படத்திலும் நடிக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் 'யாதும் ஒரே யாரு கேளீர்' படத்தில், இலங்கையை சேர்ந்த பெண் கதாப்பாத்திரத்தில் இவர் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: தமிழில் வில்லனாக நடித்தாலும் ரியல் ஹீரோ என நிரூபித்த அக்ஷய் குமார்! புன்னகையோடு மீண்டும் வழங்கிய உதவி!
 

இந்த படத்தில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் கனிகா.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜாடைமாடையாக பேசி வம்பிழுத்த அருணை அடிவெளுத்த முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
1000 எபிசோடுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வரும் சீரியலை இழுத்து மூடும் சன் டிவி - அதிர்ச்சியில் ரசிகர்கள்