இவரெல்லாம் ஹீரோவா?... சினிமாவில் இப்படிப்பட்ட அவமானங்களையா சந்தித்தார் மறைந்த நடிகர் முரளி...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 28, 2020, 1:52 PM IST

கருப்பாக இருக்கும் ஹீரோக்களை கோலிவுட் வட்டாரம் பெரிதாக கண்டுகொள்ளாத காலகட்டம் அது.


தமிழ் சினிமாவில் மறக்க முடியாத தனி இடத்தை பிடித்தவர் நடிகர் முரளி. பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரான சித்தலிங்கையாவின் மகனான முரளியை, இயக்குநர் கே.பாலச்சந்திர அறிமுகப்படுத்தினார். 1984ம் ஆண்டு கவிதாலயா தயாரிப்பில் வெளியான பூவிலங்கு திரைப்படம் மூலம் ஹீரோவாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் முரளி.  பகல் நிலவு, இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, சொன்னால்தான் காதலா, இரணியன், சுந்தரா டிராவல்ஸ் உட்பட முரளி நடித்த வெற்றிப் படங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: ஆபாச படம் பார்த்த தமன்னா... ஜாலிக்காக நண்பர் வீட்டில் செய்த கேவலமான வேலை... வைரலாகும் வீடியோ...!

இதயம் படத்தில் காதலை சொல்ல முடியாமல் தவித்த முரளியை யாரும் மறந்திருக்க முடியாது. அப்படியொரு ஏதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞன். மாரடைப்பால் முரளி உயிரிழந்த போது அவருக்கு 47 வயது.  அவருடைய மரணம் தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியது. முரளி போன்ற நடிகர் இன்று இல்லையே என நம்மை எல்லாம் ஏங்கவைக்கிறது. அப்படிப்பட்ட ஏதார்த்த நாயகன் முரளி மறைவிற்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: பெற்ற தாயிடமே மகளை படுக்கைக்கு அழைத்த இயக்குநர்... கதறிய பிரபல குழந்தை நட்சத்திரம்...!

கருப்பாக இருக்கும் ஹீரோக்களை கோலிவுட் வட்டாரம் பெரிதாக கண்டுகொள்ளாத காலகட்டம் அது. அப்போது தான் முரளி ஹீரோவாக அறிமுகமானார். சினிமாவில் காலடி எடுத்த வைத்த ஆரம்ப கட்டத்தில் முரளி என்ன மாதிரியான அவமானங்களை எல்லாம் சந்தித்தார் என அந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார். தனது கருப்பான நிறம் காரணமாக பலரும் முரளியை அசிங்கப்படுத்தியுள்ளனர். படப்பிடிப்பின் போது கூட யாரும் கண்டுகொள்ள மாட்டார்களாம். பிரபல தயாரிப்பாளரான முரளியின் தந்தையிடமே இவரெல்லாம் ஹீரோவா என காதுபட பேசுவார்களாம். படப்பிடிப்பின் போது கேரவன் கூட கொடுக்கமாட்டார்கள், அப்போது எல்லாம் அம்மாவிடம் கண்ணீர் விட்டு கதறுவாராம் முரளி. தமிழ் மக்கள் தன்னை ஏற்றுக்கொண்டார்கள், அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி என்று தெரிவித்துள்ளார். 
 

click me!