அஜித் பட இயக்குனரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு...!

First Published Aug 4, 2018, 4:49 PM IST
Highlights

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தவர் இயக்குனர் சி. சிவகுமார். இவர் அஜித் தன்னுடைய ஆரம்பகாலத்தில் நடித்த 'ரெட்டை ஜடை வயசு' படத்தினை இயக்கியவர்.

சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்தவர் இயக்குனர் சி. சிவகுமார். இவர் அஜித் தன்னுடைய ஆரம்பகாலத்தில் நடித்த 'ரெட்டை ஜடை வயசு' படத்தினை இயக்கியவர். மேலும், ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த 'ஆயுத பூஜை' திரைப்படத்தின் இயக்குனரும் இவர் தான். அதன் பிறகு நீண்ட காலமாக இயக்குனர் சிவகுமார் படங்களை இயக்கவில்லை.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து அழுகிய நிலையில் இவருடைய உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் இதுகுறித்து தீவீர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்படுவதால் நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இறந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது இவருடைய உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளது. போலீஸ் விசாரணையின் முடிவில் இறப்பிற்க்கான காரணம் குறித்து தெரியவரலாம்.

click me!