Thunivu Lyric Song: பாத்து பாத்து பாடலா செதுக்கி வச்சிருக்கியே - யாருய்யா நீ: இத்தன நாளா எங்க இருந்த?

Published : Dec 18, 2022, 04:10 PM IST
Thunivu Lyric Song: பாத்து பாத்து பாடலா செதுக்கி வச்சிருக்கியே - யாருய்யா நீ: இத்தன நாளா எங்க இருந்த?

சுருக்கம்

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான காசேதான் கடவுளடா என்ற பாடல் வெளியாகி சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் இணைந்துள்ள 3ஆவது படம் துணிவு. என்ன டைட்டிலை கேட்டாலே மாஸா இருக்குல. ஆமா, அஜித்தின் கெட்டப்பும் மாஸாதான் இருக்கும். அதான் பொங்கலுக்கு வரும்ல அப்போ பாருங்க படமே டாப் டக்கராகவே இருக்கும். இதுவரை தமிழ் சினிமாவில் வராத படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 

நாச்சியார் vs லவ் டுடே: மாமாகுட்டி......இவானாவுக்கு பேர் கொடுத்த படம் எது?

துணிவு படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய ரோலில் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா, மமதி சாரி, சிபி சந்திரன், மகாநதி சங்கர், பிரேம்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தமிழக திரையரங்கு உரிமத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், வெளிநாட்டு உரிமத்தை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக துணிவு படத்தில் இடம் பெற்றிருந்த முதல் சிங்கிள் டிராக் சில்லா சில்லா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இவ்வளவு ஏன், யூடியூப் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், பாட்டும் சூப்பர், அஜித்தின் டான்ஸும் சுப்பர் அல்லவா.

உன்னை மிஸ் செய்கிறேன்... மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா! நெஞ்சை உலுக்கும் பதிவு!

இந்த நிலையில், துணிவு படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக்கான காசேதான் கடவுளடா பிற்பகல் 2 மணிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. பாடலாசிரியர் வைசாக் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்து பாடல் பாடியுள்ளார். அவருடன் இணைந்து மஞ்சு வாரியர், ஜிப்ரான் ஆகியோரும் பாடியுள்ளனர். சில்லா சில்லா பாடலைப் போன்று இந்தப் பாடலுக்கும் கல்யாண் மாஸ்டர் தான் நடனம் அமைத்துக் கொடுத்துள்ளார்.

 

சரி, பாடல் வரிகளுக்கு போவோம்... மனிதன் பிறக்கும் போதிலிருந்து அவனை விடாமல் துரத்தும் காசு, பணம் எவ்வளவு முக்கியம் என்பதையும், அளவுக்கு மீறி சேர்த்தால் என்ன ஆகும் என்பதையும், நாடே (மக்கள்) ஏகப்பட்ட இஎம்ஐல தான் இருக்கிறது என்பதையும், காசு தான் வங்கி, வங்கி தான் பாஸ் என்பதையும், காசேதான் கடவுளடா, அந்த கடவுளும் என்னை படுத்துதடா என்றும், மனிதனை மிருகமாக மாற்றுவதும், லோன் வந்தால் மனதில் மகிழ்ச்சி வருவதையும் தெள்ளத் தெளிவாக இந்தப் பாடல் வரிகள் எடுத்துரைக்கிறது. இது கோடீஸ்வரனுக்கு பொருந்துமோ இல்லையோ, தினந்தோறும் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பாமரனுக்கும் கண்டிப்பாக பொருந்தும்.

செம்ம மாஸ்... 'துணிவு' படத்தில் மஞ்சு வாரியர் பாடிய 'காசே தான் கடவுளடா' லிரிக்கல் பாடல் வெளியானது!

நல்லா, தெளிவாக யோசித்து யோசித்து பாடலாசிரியர் வைசாக் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். 
இந்தப் பாடல் வரிகளை கேட்க கேட்க வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், இனிமேல் நடக்க இருக்கும் சம்பங்கள் எல்லாமே நினைவிற்கு வருகிறது. எது எப்படியோ அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் தானே.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் படத்தின் 7 நட்சத்திரங்களின் வயது என்ன? படம் ஹிட் கொடுக்குமா?
அகண்டா 2 ரிலீஸ் நிற்க இதுதான் காரணமா? பாலையா அடுத்து என்ன செய்வார்?