நாச்சியார் vs லவ் டுடே: மாமாகுட்டி......இவானாவுக்கு பேர் கொடுத்த படம் எது?

Published : Dec 18, 2022, 03:00 PM IST
நாச்சியார் vs லவ் டுடே: மாமாகுட்டி......இவானாவுக்கு பேர் கொடுத்த படம் எது?

சுருக்கம்

நடிகை இவானாவிற்கு சமீபத்தில் திரைக்கு வந்த லவ் டுடே படம் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை இவானா. இவர், மலையாளத்தில் மாஸ்டர்ஸ் மற்றும் ராணி பத்மினி ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ஜோதிகாவின் நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கோட்டையரசி என்ற கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

செம்ம மாஸ்... 'துணிவு' படத்தில் மஞ்சு வாரியர் பாடிய 'காசே தான் கடவுளடா' லிரிக்கல் பாடல் வெளியானது!

ஒரு மாதிரி ஏழை பெண்ணாக வீட்டு வேலை செய்து வரும் பெண் ரோலில் நடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம். இளம் வயதிலேயே அதுவும் அறிமுக படத்திலேயே ஒரு குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு பேர் எடுத்து கொடுத்ததோ இல்லையோ, சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றி வாகை சூடிய லவ் டுடே டாப் டக்கர் படமாக அமைந்தது. ஏனென்றால், இன்றைய காலகட்ட இளைஞர்களுக்கு ஏற்ற படமும் கூட, வசனமும், கிளாமரும் கூட குறைச்சலா இருந்தாலும் வித்தியாசமான கதையம்சம் டாப் லெவல் தான். யாருமே யோசிக்காத ஒரு கதையை எடுத்து வைத்திருக்கிறார்.

Avatar 2 box office: 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இரண்டே நாளில் அடித்து நொறுக்கிய வசூல்? முழு விவரம் இதோ..!

நிகிதா என்ற கதாபாத்திரம் இவானாவிற்கு நல்ல பெயரை கொடுத்துள்ளது. கோபத்தில் சண்டை போடுவதாக இருந்தாலும் சரி, காதல் வந்தால் வெளிப்படுத்தும் விதமாக இருந்தாலும் சரி இவானாவின் நடிப்பு டாப் தான். கணவன் மனைவியோ, காதலிப்பவர்களோ, பெற்றவர்களோ யாராக இருந்தாலும் தங்களது மொபைலை மாற்றி வைத்துக் கொண்டால் என்னென்ன பிரச்சனை வருகிறது. அதனால், எவ்வளவு அவமானம், கஷ்டம் என்பதை இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்பவே சுட்டி காட்டிவிட்டார். யாராலும் 100 சதவிகிதம் உண்மையாகவும் இருக்க முடியாது, 100 சதவிகிதம் உண்மையில்லாமலும் இருக்க முடியாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு ஆட்டம் போட்ட 'தளபதி' ரஜினி! அநியாயம் பண்றீங்களே சதீஷ் ஜாலி ட்வீட்! வீடியோ

உண்மையான அன்பும், காதலும் இருந்தால் மட்டுமே ஒரு மொபைல் அல்ல, எத்தனை மொபைல் போனையும் மாற்றிக் கொள்ளலாம். நாச்சியார் படத்திற்கும், இந்தப் படத்திற்கு என்ன வித்தியாசம் என்று கேட்டால், நாச்சியாரை விட இந்தப் படத்தின் கதையும், வசனமும், பாடலும் ரசிகர்களுக்கு பிடித்தவாறே இருந்துள்ளது.

ஒருமுறை பார்த்தாலும் கவுண்டமனி சொல்வது போன்று எங்க மறுக்கா மறுக்கா சொல்லு என்பதற்கேப மறுபடியும், மறுபடியும் இந்தப் படத்தை பார்க்க தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது மலையாளத்தில் காம்ப்ளக்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஹீரோவாகும் முன்பே ஷாக் கொடுத்த அகிரா நந்தன்: பவன் கல்யாண் ஏன் சிரித்தார்?
ஐயோ..கடல் பட ஹீரோயினா இது? அடையாளமே தெரியாம மாறிப் போன ராதாவின் மகள்; ஷாக் ரிப்போர்ட்!