விஜய்யின் ரஞ்சிதமே பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆடினால், எப்படி இருக்கும்? யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு 'தளபதி' படத்தில் இடம்பெறும் பாடலுடன் எடிட் செய்து... வெளியிலாகியுள்ள வீடியோவை நடிகர் சதீஸ் வெளியிட்டு போட்டுள்ள ட்வீட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்துள்ள, 'வாரிசு' திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தூளாக நடந்து வருகிறது. மேலும் ஆந்திரா, மற்றும் தெலுங்கானாவில் சிரஞ்சீவி மற்றும் நந்தமூரி பாலகிருஷ்ணா ஆகியோர் படங்கள் நேரடியாக வெளியானாலும், விஜய்யின் 'வாரிசு' படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அஜித்தின் 'துணிவு' படமும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளதால், 400 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் இது சம்பந்தமாக உதயநிதியை சந்தித்து பேச உள்ளதாக தில் ராஜு கூறி இருந்தார். கோலிவுட் திரையுலகில் இருவருமே முன்னணி நடிகர்கள் என்பதால்... தமிழகத்தில் யார் திரைப்படம் அதிக தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது தீர்க்க முடியாத மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.
இவரு நம்ப லிஸ்டிலேயே இல்லையே? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளரால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடலுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆடினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையை நிறைவு செய்யும் விதமாக, 'தளபதி' பாடலில் காட்டு குயில் பாடலுடன், ரஞ்சிதமே பாடலை எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருவது ஒருபுறம் இருக்க, காமெடி நடிகர் சதீஷ் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அநியாயம் செய்கிறீர்கள் என ஜாலி ட்வீட் போட்டுள்ளார்.
Adappaavingalaaa Aniyaya sync pandringale 😍😍😍 pic.twitter.com/15GP6uVTnZ
— Sathish (@actorsathish)