நிறைமாத நிலவே வா வா.. 9 மாதத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடும் அமலா பால்.. வைரல் வீடியோ..

Published : Jun 10, 2024, 02:19 PM IST
நிறைமாத நிலவே வா வா.. 9 மாதத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடும் அமலா பால்.. வைரல் வீடியோ..

சுருக்கம்

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், பேபி காம் டவுன் பாடலுக்கு நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். பின்னர் மைனா படத்தின் மூலம் பிரபலமானார். இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்த நிலையில், விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். இதன் மூலம் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் அமலா பால்.

இதனிடையே இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து வந்த அவர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அமலா பால். ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2016-ம் ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 

கில்லி வசூலை நெருங்க கூட முடியாத இந்தியன்.. ரீ ரிலீஸில் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

இதை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அமலா பால் நடிப்பில் கடைசியாக பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெகத் தேசாய் என்பவரை அமலா பால் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதையும் அமலா பால் அறிவித்தார். 

Nayanthara : கேரவன் இல்ல.. ஆனா டிரஸ் மாத்தணும்.. நயன்தாரா என்ன செஞ்சாங்க தெரியுமா? பிரபலம் சொன்ன சீக்ரெட்..

கர்ப்பிணியாக இருக்கும் போட்டோ வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வந்தார் அமலா பால். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவர், பேபி காம் டவுன் பாடலுக்கு நடனமாடி உள்ளார். அந்த வீடியோவில் படு க்யூட்டாக இருக்கிறார் அமலா பால். அவரின் வீடியோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!