கில்லி வசூலை நெருங்க கூட முடியாத இந்தியன்.. ரீ ரிலீஸில் முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?
இந்தியன் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.

kamal haasan nedumudi venu indian 2
ஷங்கர் இயக்கத்தில் 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேனு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
Indian 2
வசூல் ரீதியிலும் விமர்சன ரீதியிலும் இந்த படம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்தியன் படத்தின் கதை, திரைக்கதை, மேக்கிங், பாடல்கள், நடிப்பு என இன்றும் இந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
Indian 2
இந்த நிலையில் இந்த படத்தின் 2-வது பாகமான இந்தியன் 2 படம் ஜூலை 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர, சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, ப்ரியா பவானி சங்கர், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்தியன் 2 உள்ளது.
இந்த சூழலில் இந்தியன் 2 படத்தை புரோமோட் செய்யும் விதமாக இந்தியன் படம் கடந்த 7-ம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கில்லி படம் அளவுக்கு இந்தியன் ரீ ரிலீஸ் ஓடவில்லை என்றாலும், இந்த வாரம் வெளியான மற்ற புதிய படங்களை விட அதிக வசூலை பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1.1 கோடி என்று கூறப்படுகிறது. கில்லி படம் ரீ ரிலீஸான போது இப்படம் முதல் நாளில் ரூ.10 கோடி வசூல் செய்திருந்தது. இந்த படம் ரீ ரிலீஸ் செய்து 50 நாட்களாக திரையரங்குகளில் ஓடியது குறிப்பிடத்தக்கது.